18 வது விமானப்படை தளபதியாக எயார் மார்ஷல் சுதர்ஸன பத்திரன அவர்கள் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
5:13pm on Wednesday 30th December 2020
இலங்கை விமானப்படையின் 18வது   தளபதி எயார் மார்ஷல் சசுதர்சன பத்திரன  அவர்கள் 2020 நவம்பர் 03 ம் திகதி  சுபநேரத்தில் தனது கடமைகளை ஆரம்பித்தார். இலங்கை சோஷலிச ஜனநாயக குடியரசின் தலைவரும் முப்படை தளபதியுமான  அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய  அவர்களின் முன்னிலையில்  கடந்த 2020 நவம்பர் 02 ம் திகதி  அவர்  விமானப்படை தளபதியாக பொறுப்பேற்றதை அடுத்து அவர் எயார் மார்ஷல் நிலைக்கு  பதவி உயர்த்தப்பட்டார்.

விமானப்படை வர்ண அணிவகுப்பு படைப்பிரிவினரால்  அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதை அடுத்து  18வது  விமானப்படை தளபதியாக  முதல் தடவையாக  அவர் அனைவருக்கும் முன்னிலையில் உரைநிகழ்தினார். இந்த நிகழ்வில் அனைத்து விமானப்படைகளிலும் உள்ள அதிகாரிகள் படைவீரர்கள் மற்றும் சிவில் ஊழியராகள்  இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்  மேலும் நேரடியா அனைத்து விமானப்படை தளங்களுக்கும்  இந்த நிகழ்வு ஒளிபரப்பட்டது.

விமானப்படை தளபதியாக ஜனாதிபதி அவர்களினால்  தெரிவு செய்யப்பட்டமைக்கு  ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி  தெரிவித்தார் மேலும் பிரதமர் மற்றும் பாதுகாப்பு செயலாளருக்கும் நன்றிகளையும் தெரிவித்த அவர்  விமானப்படைக்கு தமது சிறந்த சேவையை அவர் ஆற்றுவார் என்றும் இந்த இடத்தில்  வாக்குறுதியளித்தார்.

அதேபோல்  விமானப்படை  தளபதியாக  அவர் பொறுப்பேற்றதை முன்னிட்டு சத்தியப்பிரமாணம் செய்தார்.

தனது 35 வருட கால விமானப்படை சேவா அனுபவத்தில் தாய்நாட்டுக்காகவும்30 வருட  தீவிரவாத  தாக்குதல்  சம்பந்தமாக  விமானப்படையின் பொறுப்புப்பற்றியும்  கடமை பற்றயும் அதன்பின்பு  விமானப்படைக்கு வெளிநாட்டு பயிற்சிகள் மற்றும் நிர்வாக திறன்களை அதிகரித்து விமானப்படையை தரமுயர்த்துவதைக்கான  தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

தனது உறையின்போது  04 இலக்குகளை முன்வைத்தார்  முதலாவதாக நாட்டின் இறையாண்மை நாட்டின் ஒருமைப்பாடு ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் விமானப்படையின் ஆற்றலை பலப்படுத்துவது , இரண்டாவது  கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது , மூன்றாவது ஆளில்லா விமானங்களின் அணியை பலப்பலடுத்துவது , நான்காவது இயற்கை அனர்தனத்தின் போது  மீட்பணிகளின் திறன்களை அதிகரிப்பது இவற்றில் மூன்று தேசிய பாதுகாப்பும் 04 வதானது மீட்பு மற்றும் உதவி நடவடிக்கைகள் தொடர்பானதாகும்.

பதவியேற்பு வைபவத்தை  முன்னிட்டு  கலாநிதி. வணக்கத்துக்குரிய பெல்லங்வில தம்மரத்ன நாயக்க தேரர் அவர்களின் தலைமையில் பூஜை வழிபாடும் இடம்பெற்றது   


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை