இல 09 தாக்குதல் ஹெலிகாப்டர் படைப்பிரிவானது தனது வெள்ளிவிழாவை கொண்டாடியது.
3:46pm on Thursday 21st January 2021
இல 09 தாக்குதல் ஹெலிகாப்டர் படைப்பிரிவானது 1995ம்  ஆண்டு  நவமபர் 24   திகதி  03 எம் ஐ  -24 ஹெலிகாப்டர்களை  கொண்டு  தரைப்படைக்கு  ஆதரவாக  செயற்படக்கூடிய வகையில் குறைந்த சக்தியில் இயக்கக்கூடிய வகையில் ஹிங்குரகொட  விமானப்படை தளத்தில்  ஆரம்பிக்கப்பட்டது .

அக்காலகட்டத்தில்  எம் ஐ  24 ரக ஹெலிகாப்டர்  ரஷியாவில் நிர்மாணிக்கப்பட்டு  ''பறக்கும் தொட்டி ''  மற்றும் டேவில்சின் தேர் அன்றும் அழைக்கப்பட்டது  போர் சோதனை திட்டமிட்ட அர்பணிப்பான தாக்குதல் என்பவற்றுக்கு சிறந்ததாகவும்  ஆகயம் மூலம்  பேரழிவுத்தரும்  திறன்கொண்டதாகவும் காணபட்டது.

இல 09 தாக்குதல் ஹெலிகாப்டர் படைப்பிரிவானது 1995ம்  ஆண்டு ஸ்கொற்றன் ளீடர்  ஜகத் ரொட்ரிகோ அவர்களின் தலைமையில் இப்படைப்படைப்பிரிவு  ஆரம்பிக்கப்பட்டு  யுத்தகால நடவடிக்கயின்போது  ''ரிவிசர நடவடிக்கை  '' யின்போது முதல்முதலாக  களத்தில் இறங்கி  ஜெயசிகுரு  , வாகரை , தொப்பிக்கலை  ஆகிய அணைத்து  யுத்த நடவடிக்கையாக்களின்போது  தனது பங்களிப்பை வழங்கியது.

அக்காலகட்டத்தில்  இப்படைப்பிரிவானது     மற்றைய படைப்பிரிவை ஒப்பிடுகையில்  மனிதவளம் மற்றும் இயந்திரவளம்  என அதிகசேதங்களை  கொண்டதாக இப்படைப்பிரிவு  உள்ளது இப்படைப்பிரிவின்  முதல் அக்கட்டளை அதிகாரி விங் கமாண்டர் ஜகத் ரொட்ரிகோ உட்பட 11 அதிகாரிகள் மற்றும் 15 படைவீரரக்ள் இந்த நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்து தம்மை இந்நாட்டிக்காக அர்ப்பணித்துள்ளார். தனது மகத்தான சேவையை இந்நாட்டுக்கு வழங்கியதற்காக  ஜனாதிபதி அவர்களினால் ஜனாதிபதி வர்ணமும்  வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த  வெள்ளிவிழாவை முன்னிட்டு  இப்படைப்பிரிவின்  பதில் கட்டளை அதிகாரி விங் கமாண்டர்  இந்திக விஜயதிலக  அவர்களின்  தலைமையில்  காலை அணிவகுப்பு பரீட்சனை  பரீட்சிக்கப்பட்டது அதனை தொடர்ந்து  உரைநிகழ்திய கட்டளை அதிகாரி அவர்கள்  இப்படைப்பிரிவால்  நாட்டுக்கு செய்யப்பட்டுள்ள சேவையினை  நினைவுகூர்ந்தார் .

அதனை நினைவுகூரும்வகையில்  மரக்கன்று ஒன்றும் நட்டுவைக்கப்பட்டது  அதனை  தொடர்ந்து  எம் ஐ  24  நினவுத்தூபியில்  போர்வீரர்களை நினைவுகூரும்வகையில்  மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது

இந்த நிகழ்வில்  வவுனியா விமானப்படை கட்டளை அதிகாரி மற்றும் ஹிங்குரகோட விமானப்படை தல கட்டைஅதிகாரி உட்பட முன்னாள் இப்படைப்பிரிவின்  கட்டளைதிகாரிகள் படைவீரரர்கள் அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை