அம்பாறை விமானப்படைத்தளத்தில் வெற்றிகரமாக கேடட் அதிகாரிகளுக்கான துப்பாக்கி கையாளுதல் தொடர்ப்பான உயர் பயிற்சிநெறி வெற்றிகரமாக நிறைவுபெற்றது.
11:42am on Wednesday 27th January 2021
அம்பாறை ரெஜிமென்ட் விமானப்படை  பயிற்ச்சி  மையத்தில்  முதல் முறையாக விமானப்படை கடேட் அதிகாரிகளுக்கான துப்பாக்கி கையாளுதல்  மற்றும்  குறிபார்த்து வெடிவைத்தல் தொடர்ப்பான உயர் பயிற்சிநெறியை இல  58 ம் கடேட் பயிற்சிநெறியில்  உள்ள 14 அதிகாரிகள் பங்குபற்றி வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.

இந்த பயிற்சிநெறியானது  கடந்த  2020  ஆகஸ்ட் 30 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 20 நாட்களில்  சிறந்த புள்ளிகள் மற்றும்  சிறந்த சாதனையுடன்  கடேட் அதிகாரிகள்  வெற்றிகரமாக நிறைவு செய்த்தனர்.

இதன்போது  பயிற்சியாளர்களுக்காக  எம் 47 சீன பிஸ்டல் ( கைத்துப்பாக்கி ) மற்றும்  சீன டீ-56  ரக துப்பாக்கி ஆகியன தூப்பாக்கிகள்  தொடர்ப்பன  துல்லியமான பயிற்ச்சியும்  கையாளும் திறமைகளும் பயிற்றுவிக்கப்பட்டன.

இந்த பயிற்சிநெறியானது விமானப்படையின் தரைப்படை செயற்பட்டு பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ரொட்ரிகோ அவர்களின் வழிகாட்டலின்கீழ்  விமானப்படை பயிற்சி பிரிவு பணிப்பளார் எயார் வைஸ் மார்ஷல் பாயோ அவர்களின்  ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.

இந்த பயிற்சிநெறி வைபவத்தில் அம்பாறை விமானப்படை பதில் கட்டளை அதிகாரி விங் கமாண்டர்  ஆனந்த குமாரசிறி அவர்களின் பங்கேற்பில் இடம்பெற்றது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை