நாட்டின் சௌபாக்கியத்திற்காக இலங்கை சுத்தத்திர சதுக்கத்தில் தொடர் 03 வார பிரித் நிகழ்வு.
9:19pm on Wednesday 3rd February 2021
நாட்டின் சௌபாக்கியத்திற்காக  இலங்கை சுத்தத்திர சதுக்கத்தில் தொடர் 03 வார பிரித்  நிகழ்வின் இறுதி வாரம்  இலங்கை விமானப்படையின் அனுசரணையில் இடம்பெற்றது.

தொடர்ச்சியாக 03 வாரங்களாக  பகல்  இரவு  பிரித்   நிகழ்வது  கடந்த 2020 நவம்பர்  18 தொடக்கம்  2020 டிசம்பர் 09 வரை  இடம்பெற்றது.

இந்த நிகழ்வானது அதிமேதகு ஜனாதிபதியின் ஆலோசனைப்படி  பாதுகாப்பு அமைச்சரகம், முப்படை மற்றும் போலீஸ் ஆகிய படைப்பிரிவினரின் பங்களிப்பில் இடப்பெற்றது.

இந்த நிகழ்வின் பௌத்தாலோக்க மாவத்தையில்  உள்ள ஸ்ரீ கல்யாணி யோகாஷ்ர்மா பௌத்த  விஹாரையின் தலைமை விஹாராதிபதி  சங்கைக்குரிய  பஹல விடியல ஜனனந்தபிதன  தேரர் அவர்களின் தலைமையில்  பூஜைவழிபாடுகள்  இடம்பெற்றன.

இதன் இறுதி வாரம் விமானப்படையின் அனுசரணையில்  இடம்பெற்ற பூஜை  வழிபாடுகளில்  காலைநேரம்  , கிரியாகார பூஜையும் பகல் நேரத்தில் புத்த பூஜை வழிபாடும் இரவு நேரத்தில்  கிளன்பச பூஜை வழிபாடும் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் சுற்றுசூழல் அமைச்சர்  கௌரவ  மஹிந்த அமரவீர,  மற்றும் சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின் உற்பத்தி திட்ட மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் கௌரவ துமிந்த திஸ்ஸநாயக மற்றும் விமானப்படை தலைமை தளபதி  மற்றும் விமானப்படை பணிப்பளார் மற்றும் அதிகாரிகள் படைவீரக்ள் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை