சீனக்குடா விமானப்படை கல்விப்பீடத்தின் புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
9:37pm on Wednesday 3rd February 2021
சீனக்குடா    விமானப்படை கல்விப்பீடத்தின்  கட்டளை புதிய  அதிகாரியாக எயார் கொமடோர் எதிரிசிங்க   அவரகள் கடந்த 2020 டிசம்பர் 03 ம் திகதி  உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்  முன்னாள் கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் உதேனி  ராஜபக்ஷ   அவர்களினால் பொறுப்புக்கள்  அணிவகுப்பு முறை மூலம் கையளிக்கப்பட்டது. முன்னாள் கட்டளை அதிகாரியான எயார் வைஸ் மார்ஷல் ராஜபக்ஷ அவர்கள் கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தின்  கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அணிவகுப்பு முடிவின் பின்பு பொறுப்புக்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டு அதனபின்பு   முன்னாள் கட்டளைதிகாரியான எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ   அவர்களினால் உரை நிகழ்த்தப்பட்டது இதன்போது  அனைவருக்கும் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்கு  தனது நன்றியயும் மேலும் இக்கல்விபீடத்தில்  சேவையற்றகிடைத்தமைக்கு  தான்   மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார் .

புதிய கட்டளை அதிகாரியான எயார் கொமடோர் எதிரிசிங்க அவர்கள்  2020 டிசம்பர் 04 ம் திகதி  மத அனுஷ்டங்களுக்கு பின்பு தனது கடமைகளை ஆரம்பித்தார் மேலும் அவர்  கிழக்கு வான் கட்டளை அதிகாரியாகவும் பதவியேற்றுக்கொண்டார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை