இலங்கை அணுசக்தி ஒழுங்குமுறை சம்மேளனத்தினால் இலங்கை விமானப்படைக்கு கதிர்வீச்சி அளவீடு செய்யும் கருவி நன்கொடையாக அளிக்கப்பட்டது.
9:44am on Sunday 7th February 2021
இலங்கை விமானப்படையானது  இலங்கை அணுசக்தி ஒழுங்குமுறை  சம்மேளனத்தின்  07 முக்கிய பங்குதாரர்களில்  ஒன்றாகும்  இதன்மூலம் நாட்டில் ஏற்படக்கூடிய அணு அல்லது கதிரியக்க சூழ்நிலைகளை  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பெரும் சேவையை செய்துவருகின்றது

இலங்கை அணுசக்தி ஒழுங்குமுறை  சம்மேளனம் ஆனது  சர்வதேச  சர்வதேச அணுசக்தி அமைப்பின் பங்குதாரராகும்  இதனால்இலங்கையின் அணுசக்தி பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கத்துடன் இலங்கையு அணுசக்தி ஒழுங்குமுறை  சம்மேளனத்தின்  தொடர்புடைய பங்குதாரர்களுக்கு உதவி செய்துவருகின்றது  வழங்குகிறது.

கட்டுநாயக்க  சர்வதேச விமானநிலையத்தின் வழியாக கொண்டுசெல்லப்படும் பொருட்கள் தொடர்பாக ஆய்வு மற்றும் பாதுகாப்பு கடமைகளில் முக்கிய  பங்குதாரராக  செயற்படும்  இலங்கை விமானப்படைக்கு கடந்த 2020 டிசம்பர்09 ம்  திகதி   சிறப்பு கதிரியக்க பொருள் கண்டறிதல் மற்றும் கதிரியக்க அளவீட்டு கருவி ஓன்று நன்கொடையாக வழங்கப்பட்டது.

இந்த வைபவம்  கொழும்பில் உள்ள சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின் உற்பத்தி திட்ட மேம்பாட்டு அமைச்சகத்தில் சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின் உற்பத்தி திட்ட மேம்பாட்டு  இராஜாங்க  அமைச்சர்கௌரவ துமிந்த  திஸாநாயக்க அவர்களினால்  இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களிடம்  கையளிக்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் கௌரவ .துமிந்த திஸாநாயக்க அவர்களினால்  இந்த திட்டத்த்திற்கு உறுதுணையாக செயற்பட்ட இலங்கை அணுசக்தி ஒழுங்குமுறை சபையின்  தலைவர் கலாநிதி டி.எம்.எஸ். திசனாநாயக்க மற்றும் இலங்கை அணுசக்தி ஒழுங்குமுறை சபையின் பணிப்பாளர்  ஜெனரல் திரு. எச்.எல். அனில் ரஞ்சித் ஆகியோருக்கு  தனது விடேச நன்றிகளை தெரிவித்தார்.

இந்த உபகரணம்  சர்வதேச விமான நிலையங்களில் கடமைவகிக்கும் விமானப்படையின் வேதியியல் உயிரியல் கதிரியக்க அணு மற்றும் வெடிக்கும் (CBRNE) பிரிவின் திறன்களை மேம்மைப்படுத்த பயன்படுத்தப்படும் .இந்த  நிகழ்வில் விமானப்படை  தரைப்படை செயற்பாட்டு பணிப்பளார் எயார் வைஸ் மார்ஷல் லெப்ரோய் மற்றும்  விமானப்படையின் வேதியியல் உயிரியல் கதிரியக்க அணு மற்றும் வெடிக்கும் (CBRNE) பிரிவின்  கட்டளை அதிகாரி விங் கமாண்டர் நிலந்த பெரேரா ஆகியோர் கலந்துகொண்டனர்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை