இலங்கை விமானப்படையின் P T -06 ரக பயிற்ச்சி விமானம் விபத்துக்குளானது.
11:15am on Sunday 7th February 2021
இலங்கை விமானப்படை சீனவராய கல்விபீடத்தின் இல 01 விமானிகளின் பயிற்ச்சி  படைப்பிரிவிக்கு  சொந்தமான  PT -06 ரக  விமானம்  ஓன்று கந்தளாய் பகுதியின் ஜனரஞ்சக சூரியபுர பகுதியில் விழுந்து விபத்துக்குளானது.

சீனவராய விமானப்படைத்தளத்தின் இருந்து சுமார் 14 கடல்  மைல்  தொலைவில்  பயிற்சிக்காக விமானப்பயிற்சியில் ஈடுபட்ட  கடேட் அதிகாரி தான் தனியாக பயிற்ச்சிக்காக கொண்டு செல்லும் சந்தர்ப்பத்திலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து இடம்பெற்ற நாள்  பிற்பகல் 01.05 க்கு  புறப்பட இந்த விமானம்  சரியாக பிற்பகல் 01.15 க்கு  விமானப்படை கட்டுப்பட்டு மையத்தின் தொடர்ப்பை இழந்துள்ளது. இந்த விபத்தின்போது  எந்த பொதுச்சொத்துக்களுக்கோ  வேறு நபர்களுக்கான எந்த சேதமோ இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களின்  ஆலோசனைக்கு அமைய விபத்துக்கான காரணம்களை கண்டறிய விடேச குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

கடேட் அதிகாரியான  அமரகோன்  அவர்களை திருகோணமலை வைத்தியசாலைக்கு  கொண்டு செல்லப்பட்ட பின்னர்  அவர் விபத்தில் ஏற்பட்ட காயம்கள்  காரணமாக  மரணம் அடைத்தார் என்ற அறிக்கை கிடைக்கபெற்றது.

கடேட் அதிகாரியான அமரகோன் அவர்கள்  கேகாலை மத்திய மகாவித்தியாலயத்தின்  பழைய மாணவர் ஆவர்  இவர் கடந்த 2019 ம் ஆண்டு விமானப்படையில் இணைந்து  அதே ஆண்டு ஜூலை  தனது விமானப்பயிற்சிகளை ஆரம்பித்தார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை