04 வது வான்வீரருடன் வான்வீரர் பணியாளர் மாநாடு இலங்கை விமானப்படை மற்றும் அமெரிக்கா விமானப்படைக்களுக்கிடையில் சிறப்பாக இடம்பெற்றது
12:01pm on Friday 23rd April 2021
04 வது வான்வீரருடன் வான்வீரர் பணியாளர் மாநாடு இலங்கை விமானப்படை மற்றும் அமெரிக்கா விமானப்படைக்களுக்கிடையில் கடந்த 2020 டிசம்பர் 16ம் 17 ம் திகதிகளில் இணையவழி நேரலை கலந்துடரையாடல் மூலம் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடளுக்கு இலங்கை விமானப்படை பயிற்ச்சி பணிப்பளார் எயார் வைஸ் மார்ஷல் துய்யகொந்தா மற்றும் அமெரிக்கா சார்பாக மேஜர் டைலர் ஒற்றன் பசிபிக் விமானப்படைகளின் தளபதியின் (PACAF) அணிதிரட்டல் உதவியாளர். ஆகியோர் தலைமை தங்கினார்கள்.
இந்த பணியாளர் கலந்துரையாளலானது இரு விமானப்படைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகின்ற மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும், மேலும் எதிர்வரும் ஆண்டுகளில் இரு விமானப்படைகளுக்கிடையில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைய புதிய ஆற்றல்களை ஏற்படுத்தும்.
எயார் வைஸ் மார்ஷல் துய்யகொந்தா அவர்கள் இதன்போது அமெரிக்க விமானப்படைஅளித்த ஆதரவையும் உதவியையும் பாராட்டியதோடு குறிப்பாக கடல்சார் கள விழிப்புணர்வு, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் மற்றும் சைபர் பாதுகாப்பு போன்ற துறைகளில் இலங்கை விமானப்படையின் திறன்களை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
இரு நாடுகளுக்கிடையிலான கூட்டுறவை ஆழப்படுத்தவும், இந்து -பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இத்தகைய நிகழ்வுகளின் முக்கியத்துவத்தை மேஜர் ஜெனரல் ஒட்டன் எடுத்துரைத்தார்.
இதன்போது இந்த கலந்துரையாடல் சிறப்பாக இடம்பெற்றதுடன் இதன்போது இது தலைவர்களுக்குமிடையிலான ஒப்பந்தங்களுக்கும் கையப்பம் இடப்பட்டது.