இலங்கை விமானப்படையை சேர்ந்த 27 அதிகாரிகள் இல 14 பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் பாடநெறி நிறைவுசெய்தனர் .
4:55pm on Wednesday 28th April 2021
இல  14 பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் சப்புகஸ்கந்த  கல்லூரியின்   பாடநெறி  பட்டமைப்பு வைபவம்   கடந்த 2020 டிசம்பர் 11 ம் திகதி    தாமரை தடாகம் மஹிந்த ராஜபக்ச  கலையரங்கில் இடம்பெற்றது  இந்த நிகழ்வில்  இலங்கை பாதுகாப்பு செயலாளர்  (ஓய்வுபெற்ற ) மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன அவர்கள்  பிரதான அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த பாடநெறியில்  81 ராணுவம், 23 கடற்படை, 27 விமானப்படை மற்றும் 18 வெளிநாட்டு தேசிய சேவை அதிகாரிகள் அடங்கலாக மொத்தம்149அதிகாரிகள் இன்று ஆண்டு படிப்பை வெற்றிகரமாக முடித்த பின்னர் பட்டம் பெற்றனர்.

இதன்போது   ஸ்கொற்றன் ளீடர்   ஜயவர்தன அவர்களுக்கு  சிறந்த மாணவர் அதிகாரி விருதும்  வழங்கி கௌரவிக்கபட்டது  அவருக்கு  அதற்காக  தங்க ஆந்தை ஓன்று வழங்கி வைக்கப்பட்டது .மேலும் அவரின் மதிப்பெண் அதிகமாக இருந்ததால் அவருக்கு '' தளபதி கௌரவ '' விருதும் வழங்கிவைக்கப்பட்டது

மேலும் சிறந்த வெளிநாட்டு  மாணவர் அதிகாரியாக  விங் கமாண்டர் ஆசிப் சமத் ஷேக்  ( பாக்கிஸ்தான் விமானப்படை ) அவர்களுக்கு  அதற்காக  தங்க ஆந்தை ஓன்று  வழங்கிவைக்கப்பட்டது

இந்த நிகழ்வில்   பதில்  பாதுகாப்புத் தளபதி மற்றும் ராணுவத் தளபதியான  லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிசாந்த உழுகேதென்ன , விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் சுதர்சன பத்திரன ,  டி.எஸ்.சி.எஸ்.சி.யின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள்,  இந்நிகழ்ச்சிக்கு விமானப்படை மேலாண்மை வாரிய உறுப்பினர்கள் மற்றும் முத்தரப்புப் படைகளின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை