ஒய்வு பெற்ற எயார் சீப் மார்ஷல் பீ எச் மெண்டிஸ் அவர்கள் இலங்கை விமானப்படை தளபதியாக பொறுப்பேற்று 50 வருடம் நிறைவு பூர்த்தியை முன்னிட்டு அவரை விமானப்படை கௌரவபடுத்தியது
10:00am on Tuesday 4th May 2021
முன்னாள் விமானப்படை தளபதியான எயார் சீப் மார்ஷல்     பத்மன் ஹரிபிரசாத  மெண்டிஸ் அவர்கள்  1933  ஜனவரி 23 ம் திகதி பிறந்தார்  இவரை " பெடிமெண்டிஸ் '' விசேடமாக என்று அழைப்பர்   இவர்  ராயல் சிலோன்  விமானப்படையில்  05 வது  ஆர்செற்ப்பு  பிரிவில்  1951 ம் ஆண்டு ஆகஸ்ட் 08 ம் திகதி  இணைந்தார்.

அதன்பிறகு அவர் கடேட் அதிகாரிகளுக்கான பயிற்சிகளுக்காக கிரான்வெல்  பிரித்தானிய ராயல் விமானப்படை கல்லூரிக்கு அனுப்பிவைக்கபட்டர். 1959 ஆம் ஆண்டில், பிளைட் லேப்ட்டினால்  மெண்டிஸ் அவர்கள்  கிளவுட்ஸ்டெர்ஷையரில் உள்ளறோயல் விமானப்படை விமானிகள் பயிற்ச்சி பாடசாலைக்கு  விமானி பயிலுனர் பயிற்சிக்காக அங்கு சென்று பயிற்சிகளை நிறைவு செய்தார்  இதனால் இலங்கையின் முதலாவது  விமானிகளின் பயிற்சியாளர் என்ற பெருமையும் அவரையே சாரும்.

எயார் ஷீப் மார்ஷல்  பி.எச். மென்டிஸ் அவர்கள்  பைலட் ஆபீசர் பதவிகளில் இருந்து ஏர் கமடோர் வரை நிலையான முன்னேற்றம் கண்ட அவர்   சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்பு 1971 ஜனவரி 1 ஆம் தேதி ராயல் சிலோன் விமானப்படையின் 4 வது தளபதியாக நியமிக்கப்பட்டார்.

றோயல்  சிலோன் விமானப்படைக்கு கட்டளையிட்ட முதல் இலங்கை அதிகாரி இவர், அதே அமைப்பிலும் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1972 ஆம் ஆண்டில் இலங்கை குடியரசாக மாற்றமடைந்தபோது , ராயல் சிலோன் விமானப்படை அதன் பெயரை இலங்கை விமானப்படை என மாற்றியதுடன், அதன் அனைத்து அடையாளங்களுடனும், எயார் வைஸ் மார்ஷல் பி.எச். மெண்டிஸ் இலங்கை விமானப்படையின் முதலாவது தளபதியாக  நியமிக்கப்பட்டார் .

இந்த பெருமை வாய்ந்த பாரம்பரியத்தை மனதில் கொண்டு,  தற்போதைய இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களின்  நேரடி மேற்பார்வையின் கீழ், ரத்மலான விமானப்படை அருங்காட்சியகத்தில் எயார் சீப்  மார்ஷல் பி.எச். மெண்டிஸ் (ஓய்வு)  அவர்களுக்கு  சிறப்பு வரவேற்பு விழா ஓன்று கடந்த 2021 ஜனவரி 01ம் திகதி  ஏற்பாடு செய்யப்பட்டுஇருந்தது .

இதன்போது  அவருக்கு இலங்கை  விமானப்படை  வர்ண அணிவகுப்பு  படைப்பிரிவினால்  இராணுவ மரியாதையுடன்  வரவேற்பு  அளிக்கப்பட்டது இதன்போது அவருடன்  எயார் வைஸ் மார்ஷல்  லியனகமகே மற்றும் எயார் கொமடோர் திஸ்ஸநாயக ஆகியோர் இணைந்துகொண்டார். அதனைதொர்ந்து   எயார் சீப் மார்ஷல் மெண்டிஸ் அவர்கள் நினைவாக  புகைபடத்தொகுப்பும்  மேலும் அவரின் நினைவாக அவரின் உருவம் பொருந்திய கல்வெட்டும் திறந்துவைக்கப்பட்டது . இந்தநிகழ்விற்க்கு  இலங்கை  பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற  ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள் கலந்துகொண்டார்.   

மேலும் முன்னாள் விமானப்படை தளபதிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்  அவர்கள் அனைவருடனும் இணைந்து  கேக் வெட்டி இந்த நிகழ்வை  ஆரம்பித்துவைத்தனர்  அதன்பின்பு இதன்போது  உரைநிகழ்திய   எயார் சீப் மார்ஷல் மெண்டிஸ் அவர்கள் இப்படியான ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்கு  தனது மனமார்ந்த நன்றிகளை  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவரக்ளுக்கு தெரிவித்தார்  மேலும் அவரின் சேவையை  நினைவுகூரும் விதமாக  சடங்கு முறைமையிலான வால்  ஒன்றும்  பாதுகாப்பு செயலாளரினால் வழங்கி கௌரவிக்கபட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை