இலங்கை விமானப்படையின் இல 10 ம் தாக்கத்தால் கஃபீர் படைப்பிரிவின் வெள்ளிவிழா கொண்டாட்டம்
12:34pm on Tuesday 4th May 2021
கட்டுநாயக்க  விமனப்படைத்தளத்தில் அமைந்துள்ள   விமானப்படையின்  இல 10 ம்  தாக்குதல் கஃபீர்  படைப்பிரிவின்  வெள்ளிவிழா கடந்த 2021  ஜனவரி 05 ம்  திகதியுடன்  வெள்ளிவிழா  காண்கின்றது .

இதன்  நிகழ்வுகள்  படைப்பிரிவின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர்  பெரேரா அவர்களின் தலைமையில்  இடம்பெற்றன  இதன்போது   காலை அணிவகுப்பு பரீட்சணையுடன் பதில்கட்டளை அதிகாரி அவர்கள்  ஆரம்ப உரை நிகழ்த்தினார்  இதன்போது அவர் இப்படைப்பிரிவினால்  25 வருட காலம்  எமது தாய்நாட்ற்கு  மகத்தான சேவைகள்  அளிப்பட்டதை  நினைவுகூர்ந்தார்.

இதனை தொடர்ந்து ஒரு மரம் நடப்பட்டதுடன்  மேலும்  கட்டுநாயக்க  படைத்தள  விகாரையில்  பூஜைவழிப்பாடுகளும்  இடம்பெற்றன.

1997 ம் ஆண்டு  ஜனவரி 05 ம் திகதி கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் ஆரம்பிக்கப்பட்ட இப்படைப்பிரிவானது  ஸ்கொற்றன் ளீடர்   குணசிங்க அவர்களின் தலைமையில் நிறுவப்பட்டது அவர் குருப்  கேப்டன்  நிலையில் அவர் ஓய்வுபெற்றார்

தற்போதைய  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்கள் இப்படைப்பிரிவின்  இரண்டாவது கட்டளைஅதிகாரியாக  கடமையாற்றினார் மேலும்  இப்படி[பிரிவை அப்போதைய பிளைட் லேப்ட்டினால்  பீரிஸ் அவர்கள்  நிர்வாக அதிகாரியாக செயற்பட்டார்

இப்படைப்பிரிவானது  எமது தாய்நாட்டிற்காக  மகத்தான சேவையையாற்றியுள்ளது எல் டீ டீ ஈ  பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக தனது அதியுயர் பங்களிப்பினை  வழங்கியுள்ளது  இதன்காரணமாக அப்போதைய ஜனாதிபதியாக இருந்த  மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் ஜனாதிபதி வர்ணம் வழங்கிவைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை