தீகவாவி தூபியை புனர்நிரமணம் செய்யும் திட்டத்திற்கு விமானப்படையினால் நிதியுதவி.
11:14am on Sunday 20th June 2021
தீகவாவி தூபியை புனர்நிரமணம் செய்வது தொடர்பாக கடந்த 2021 பெப்ரவரி 12 ம் திகதி கொழும்பு 07 சம்போதி விகாரையில்அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இலங்கை விமானப்படை சார்பாக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களினால் 05 மில்லியன் ரூபாய் நிதியுதவியாக ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
இந்த திட்டம் எமது நாட்டின் பிரதமரும் நிதி அமைச்சரும், புத்தசாசனா, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சரும், நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சருமான கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் கடந்த 2020 நவம்பர் 11ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இந்த புனர்நிர்மாண பணிகள் தீகவாவி விகாரையின் தலைமை தேரர் வணக்கத்துக்குரிய மஹாஓய சோபித தேரர் அவர்களின் வழிகாட்டலின்கீழ் இடம்பெற்றுவருகின்றனர்
இந்நிகழ்ச்சியில் அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க, வணக்கத்திற்குரிய வேந்தருவே உபாலி தேரர் , மகா சங்க உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு செயலாளர் மற்றும் கிழக்கு மாகாணத்திற்கான தொல்பொருள் பாரம்பரிய மேலாண்மை ஜனாதிபதி பணிக்குழு தலைவர், ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன பாதுகாப்புத் தளபதி மற்றும் இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி, பொலிஸ் மா அதிபர் மற்றும் பலர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.