இலங்கை விமானப்படையின் 70வது வருட பூர்த்தி மற்றும் குவான் சைக்கிள் சவாரி மற்றும் தளபதிகின்ன கோல்ப் போட்டிகள் தொடர்பான ஊடக சந்திப்பு.
12:09pm on Saturday 3rd July 2021
இலங்கை விமானப்படையின்  70வது  வருட பூர்த்தி மற்றும் குவான் சைக்கிள் சவாரி மற்றும் தளபதிகின்ன றக்பி  போட்டிகள் தொடர்பான ஊடக சந்திப்பு  கடந்த 2021 பெப்ரவரி  17ம் திகதி விமானப்படை தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் ஒரு சிறப்பம்சமாக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன  அவர்களினால்  விமானப்படையின்   70 வது  ஆண்டு விழாவிற்கான அதிகாரப்பூர்வ சின்னம் திறந்துவைக்கப்பட்டது .

இலங்கை விமானப்படை தனது 70 வது ஆண்டு நிறைவை 2021 மார்ச் 2 ஆம் தேதி பெருமையுடன் கொண்டாடுகிறது.  அதன் வளமான பாரம்பரியத்தை நிலைநிறுத்துவதில், "விமானப்படை தினத்தில் " அதன் காலண்டரில்  முதன்மையான நிகழ்வாக இருக்கும்.  இந்த நிகழ்வுகள் அனைத்தும்  கொவிட் -19  சுகாதார தடுப்பு விதிமுறைக்கு அமைய  நிகழ்வு கொண்டாடப்படும்.

இதன் முதல் நிகழ்வாக   களனி ரஜமஹா  விகாரையில்  மலர் பூஜை வழிபாடுகள்  மார்ச் 01ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது  இந்த நிகழ்வில்  விமானப்படை தளபதி மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த நிகழ்வுகள் கட்டுநாயக்க  விமானப்படைத்தளத்தில் மார்ச் 02 ம் திகதி   விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களின்  வழிகாட்டலின்கீழ்  அணிவகுப்பு  நிகழ்வுடன் ஆரம்பிக்கப்படவுள்ளது அதனைத்தொடர்ந்து    கட்டுநாயக்க  விமானப்படைத்தளத்தில் இருந்து தளபதி அவர்களினால்  விசேட உரை நிகழ்த்தப்படவுள்ளது அதனை நேரடியாக அனைத்து விமானப்படைத்தளங்களுக்கும்  ஒளிபரப்பப்டுள்ளது.

மேலும்  பல நிகழ்வுகள் அதனைத்தொடர்ந்து  இடம்பெறும் மேலும்  மார்ச் 05 ம் திகதி  ஜனாதிபதியினால் ஜனாதிபதி வர்ணம்   விமானப்படையின்  இல 05 தாக்குதல் படைப்பிரிவு மற்றும் இல 06 ஹெலிகாப்டர் படைப்பிரிவிற்கும்  வாக்களங்கப்பட உள்ளன இவை கட்டுநாயக்க  விமானப்படைத்தளத்திலே  இடம்பெற உள்ளன.

மேலும் இதனைத்தொடர்ந்து   விமானப்படை சைக்கிள் சவாரி மற்றும்  விமானப்படை தளபதி கிண்ண ரக்பி போட்டிகள் தொடர்நா கலந்துரையாடலும்  இடம்பெற்றன  இந்த நிகழ்வில்  விமானப்படை தளபதி மற்றும் பணிப்பாளர்கள்  விமானப்படை ஊடகப்பேச்சளர் மற்றும் விமானப்படை ரக்பி பிரிவு மற்றும் சைக்கிள் சவாரி பிரிவு பொறுப்பதிகாரிகள்  மற்றும்  அனுசரணையாளர்கள்  ஊடகவியலார்கள்  கலந்துகொண்டனர

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை