மேஜர் ஜென்ரல் தோமஸ் எல் கொனன்ற் இலங்கை விமானப்படைக்கு விஜயம்
10:01am on Monday 21st November 2011
அமெரிக்கப் படைகளின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் அடுத்த பிரதிப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கொனன்ற் அவர்கள் அண்மையில் இலங்கை விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம அவர்களை, விமானப்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
தற்போதைய மற்றும் எதிர்கால இராணுவத் திட்டங்கள் குறித்தும் அதற்கு பசுபிக் கட்டளைப்பீடம் எவ்வாறு உதவிகளை வழங்கலாம் என்பது குறித்தும் இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்தச் சந்திப்பில் பசுபிக் கட்டளைப் பீடத்தில் சிறிலங்கா விவகாரங்களை கையாளும் அதிகாரி லெப்.கேணல் ஜெர்னிகன், அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் பெட்ரிக் சூலர், பாதுகாப்புக்கான பிரதி உதவிச் செயலர் றொபேட் ஸ்கேர் ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும் இங்கு இருவருக்கும் இடையில் சுமுக கலந்துரையாடல் இடம்பெற்ற அதேநேரம் நினைவுச்சின்னங்களும் பரிமாரப்பட்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.