இலங்கை விமானப்படையினாரால் தொடர்ந்து 04 வது வருடமாக சிவனொளி பாதமலையில் சிரமதான வேலைகள்.
2:17pm on Monday 16th August 2021
இலங்கை விமானப்படையினாரால் தொடர்ந்து 04 வது வருடமாக சிவனொளி பாதமலையில் சிரமதான வேலைகள்.

இலங்கை விமானப்படையின்70 வது வருட நினைவை முன்னிட்டு சிவனொளிபாதமலையின்  பாதைகளை சுத்தம் செய்யும் வேலை திட்டம்  கடந்த 2021 மார்ச்   12  ம் திகதி இரண்டு நாட்கள்  இடம் பெற்றது.

இந்த வேலைத்திட்டம் தொடர்ச்சியாக 04 வது  முறையைக இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்போது  சிவனொளிபாதமலைக்கு வரும்  பக்தர்களினால்  வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பொலித்தீன்கள்  மற்றும் கழிவுப்பொருட்கள் என்பன  அகற்றப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் இந்த புனிதஸ்தலத்திற்கு  பக்தர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவது  வழமையாகும்.

நல்லதண்ணி பகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த சுத்தம்செய்யும் வேலைத்திட்டம்  சிவனொளிபாதமலை  உடமழுவ பகுதியில் வரை இடம்பெற்றது இந்த நிகழ்வில் சுமார் 200 விமானப்படை வீரர்கள் பங்கேற்றனர்.

மேலும்   ரத்னபுர  குருவிட்ட பாதையின் பகுதியும் சுத்தம் செய்யப்பட்டது என்பது குறிப்பிட்ட தக்கது  இந்த நிகழ்வை தியத்தலாவ விமானப்படை தள  கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பெர்னாண்டோ அவர்கள் ஒருங்கமைத்து இருந்தார் .  இந்த வருடம்  ஊடக  அனுசரணையை  தெரண  தொலைக்காட்சியின் மனுஷத்தேரான  நிகழ்வு குழுவினரும் இணைந்துகொண்டனர் .

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை