கருப்பு டிராகன் என்றழைக்கப்படும் விமானப்படையின் இல 05ம் தாக்குதல் படைப்பிரிவு தனது 30 வது வருட நிறைவை கொண்டாடியது.
8:29am on Tuesday 21st September 2021
கருப்பு டிராகன் என்றழைக்கப்படும்  விமானப்படையின் இல 05ம் தாக்குதல் படைப்பிரிவு  தனது 30 வது  வருட நிறைவை கடந்த  2021 பெப்ரவரி 01   கொண்டாடியது இதன்போது   காலை அணிவகுப்பு பரீட்சனை அப்படைப்பிரிவின்  கட்டளை அதிகாரி விங் கமாண்டர் பெரேரா அவர்களினால்  பகுப்பாய்வு செய்யப்பட்டது.

படைப்பிரிவின் அங்கத்தவர்களிடம் பேசிய கட்டளை அதிகாரியவர்கள் , இந்த புகழ்பெற்ற படைப்பிரிவினரால் தேசத்திற்கு வழங்கப்பட்ட சேவைகளை நினைவு கூர்ந்தார், மேலும் 30 ஆண்டுகால பயணத்தின்போது இப்படைப்பிரிவில்  கடமைபுரிந்த அனைத்து ஊழியர்களையும்  நினைவுகூர்ந்த்தார் ,மேலும் இப்படைப்பிரிவானது  ஒரு போர் படை என அனைத்து அம்சங்களிலும் உயர் தரத்தை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இதனை தொடர்ந்து  மரக்கன்று ஒன்றும் நட்டுவைக்கப்பட்டது  மேலும்  படைத்தள விகாரையில் போதி பூஜை வழிபாடும் இடம்பெற்றது.

1991 ம் ஆண்டு பெப்ரவரி  01 ம் திகதி 04 எப் 07 பீ எஸ் தாக்குதல் விமானம் , எப் டி  07 பீ பயிற்ச்சி விமானம்  மற்றும் இரண்டு எப் டீ 05 ரக பயிற்சி விமானங்களுடன் இந்த  படைப்பிரிவு    ஸ்கொற்றன் ளீடர்  அபயவிக்ரம  அவர்களின் கட்டளையின்கீழ் ஆரம்பிக்கப்பட்டது .

மேலும்  இந்த படைப்பிரிவில்  தற்போதைய விமனப்படைத்தளபதி  அவரக்ளும் அங்கத்தவராக இருந்துள்ளார்  ஸ்கொற்றன் ளீடர்  குணசிங்க ,  பிளைட்  லேப்ட்டினால்  பத்திரன , பிளைட்  லேப்ட்டினால் விஜயதிலகே , பிளைட்  லேப்ட்டினால்  ஹெந்தவிதாரண  போன்ற அதிகாரிகளுடன் இப்படைப்பிரிவு  ஸ்தாபிக்கப்பட்டது.

இந்த படைப்பிரிவானது கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன்  1994 ம் ஆண்டு சீனக்குடா விமானப்படை தளத்திற்கு மாற்றியமைக்கப்பட்டது மீண்டும் பாதுகாப்பு காரணமாக  1996ம் ஆண்டு  கட்டுநாயக்க விமானப்படைத்தளத்திற்கே   கொண்டுவரப்பட்டது.

மேலும் இப்படை பிரிவினை வலுப்படுத்த 2000ம் ஆண்டு 06  ரஷ்ய மிக்-27 ரக மற்றும் மிக் -23 யூ பீ ரக விமானங்களும் சேர்க்கப்பட்டன.   2007 ம் ஆண்டு இப்படைப்பிரிவுக்கு முக்கியமான வருடமாக காணப்படுகின்றது   மேலும்  நாட்டில் இடம்பற்ற யுத்தகாலகட்டத்தில் இப்படைப்பிரிவால்    600 மேற்பட்ட வான்தாக்குதல்கள்  இடம்பற்றுள்ளன  மேலும் நாவீன தாக்குதல் விமானங்களும்  இணைக்கப்பட்டுள்ளன  இப்படைபிரிவில்   இதுவரை 10 கட்டளை அதிகாரிகளும் சுமார் 25 கும் மேற்ப்பட்ட விமானிகளும் சேவையாற்றியுள்ளனர்.
மேலதிக விபரங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்க்கவும்


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை