இலங்கை விமானப்படை நீச்சல் வீரர் இலங்கையில் இருந்து பார்க்நீரிணையை கடந்து உலகசாதனை படைக்கவுள்ளார்.
3:23pm on Sunday 12th December 2021
இலங்கை விமானப்படை நீச்சல் வீரர் ரோஷன் அபயசுந்தர அவர்கள் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அமைந்துள்ள பார்க்நீரிணையை 2021 ஏப்ரல் 10ம் திகதி நீந்தி கடந்து சாதனை படைக்கவுள்ளார்.
இந்த சாதனையை படைக்கவிருக்கும் விமானப்படை நீச்சல் வீரர் கடந்த 2021 ஏப்ரல் 09ம் திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன அவர்களை சந்தித்து பேசினார் இதன்போது விமானப்படை தளபதி அவர்களினால் நீச்சல் ஒன்றும் அன்பளிப்பு செய்யப்பட்டது .
நீச்சல் வீரரான அபயசுந்தர அவர்கள் இரண்டு முறை தேசிய சாதனைகளை முறியடித்து புதியசாதனைகள் படைத்துள்ளார் அவர் 2021ஜனவரி 3ம் திகதி அன்று மாத்தறையிலிருந்து கொக்கலாவுக்கு 25 கிமீ தூரம் நீந்தி 10 மணிநேரம் 37 நிமிடங்கள் நீந்தி ஒரு புதிய சாதனையை படைத்தார்,முன்னணி விமானப்படை வீரர் அபேசுந்தர அமெரிக்க நீச்சல் பயிற்சியாளர்கள் சங்கத்துடன் இணைந்த நிலை III நீச்சல் பயிற்றுவிப்பாளர் ஆவார் மற்றும் புகழ்பெற்ற ஜூலியன் போலிங்கில் பயிற்சி பெற்றார்.மேலும் அவர் இலங்கை உயிர்காக்கும் பிரிவில் இரண்டாம் நிலைத் தரத்தைப் பெற்றுள்ள அனுபவமிக்க உயிர்காப்பாளர் ஆவார் .
இலங்கையின் நீச்சல் வீரர்களின் ஒருவரான குமாரன் ஆனந்தன் அவர்களின் 50 வருட சாதனையே இன்றும் கின்னஸ் புத்தகத்தில் உள்ளது 51 மணிநேரத்தில் இந்த தூரத்தை கடந்துள்ளார்.
இலங்கையின் நீச்சல் வீரர்களின் ஒருவரான குமாரன் ஆனந்தன் அவர்களின் 50 வருட சாதனையே இன்றும் கின்னஸ் புத்தகத்தில் உள்ளது 51 மணிநேரத்தில் இந்த தூரத்தை கடந்துள்ளார்.