கொழும்பு விமானப்படை பாலர் பாடசாலையின் கலை விழா மிக விமர்சியாக கொண்டாடப்பட்டது
8:18am on Friday 16th December 2011
கொழும்பு விமானப்படைமுகாமில் "சேவா வனிதா" அலகினால் நடாத்தப்பட்டு வரும் சர்வதேச பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழா நிகழ்ச்சிகள் கடந்த டிசம்பர் மாதம் 08ம் திகதியன்று கொழும்பு பாதுகாப்புச் சேவைகள் கல்லூரியில் மிகவும் விமர்சியாக நடைபெற்றது. சிறு பிராயத்தில் இருந்தே குழந்தைகளின் உடல் மற்றும் உள வளர்ச்சிக்கான சர்வேதேச கல்வியினை வழங்கும் இப் பாலர் பாடசாலையின் கடந்த வருட பூர்த்தியினை முன்னிட்டு மாணவர்களை கொண்ட குழுவினால் நடனம், பாடல், சங்கீதம், அணிவகுப்பு, போன்ற கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டதுடன் இது அதிதிகளின் பெறும் பாராட்டையும் பெற்றுக்கொன்டது.
இந்நிகழ்விற்காக விமானப்படையின் "சேவா வனிதா"அலகின் தலைவி திருமதி. நீலிகா அபேவிக்ரம அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், கொழும்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "எயார் கொமடோர்" விஜித குணரத்ன, பாதுகாப்புச் சேவைகள் கல்லூரியின் இயக்குனர் பிரகேடியர் பக்ஷவீர மற்றும் திருமதி. மேகலா உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.