விமானப்படையினால் உலக பூமி தினம் அனுஷ்டிப்பு.
3:36pm on Sunday 12th December 2021
2021 ம் ஆண்டுக்கான உலக பூமிதினத்தை முன்னிட்டு  கட்டுநாயக்க  விமானப்படைத்தளத்தில்  அமைந்துள்ள விமானப்படை கட்டளை  வேளாண்மை பிரிவினால்  மரம் நடுதல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது இந்த நிகழ்வுகளை  அதன் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சுதர்ஷி பெர்னாண்டோ அவர்கள் ஒருங்கமைத்திருந்தார். இந்நிகழ்வில் பிரதமஅதிதியாக தெற்கு வான் கட்டளை அதிகாரியும் கட்டுநாயக்க விமானப்படைத்தள கட்டளை அதிகாரி   எயார்  வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள் கலந்துகொண்டார்.

தற்போதைய சூழ்நிலையில்  பூமியின் வெப்பநிலையில் மற்றம் அடைந்தும் மேலும் பிளாஸ்ட்ரிக் பாவனையினால் பெருங்கடலில் அமிலத்தன்மையும் அதிகரித்து காணப்படுகின்றது மேலும் கடுமையான வெப்பத்தன்மையினால் காட்டுத்தீ போன்ற விபத்துக்களினால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் தற்போது கோவிட் -19 தோன்றினால்  இந்த உலகம் பெரும் சவாலை எதிர் கொண்டுள்ளது.

அண்மைகாலமாக இலங்கை விமானப்படையானது காடுகளை உருவாக்குவதில் தீவிர முயற்சிகளில்  ஈடுபட்டு  வருகின்றனர் வான்  வழிமூலம் ஹெலிகாப்டர்ரினால்  விதைக்குண்டுகள் வனப்பிரதேசங்களில்  வீசப்பட்டு அதற்கான செயற்படுகின்றனர்.
இலங்கை விமானப்படையினால்  காடுகள் கண்காணிக்கப்படுவதுடன்  சட்டவிரோதமான காடழிப்புகள் மற்றும்   மணல் அகழ்வுகள் என்பன கண்காணிக்கப்பட்டுவருன்றன மேலும்   காட்டுத்தீ ஏற்படும்போது தீநயப்பு பணிகளிலும் மும்முரமாக செயற்படுகின்றது.    

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை