
2021 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை பளுதூக்கும் போட்டிகள்.
2021 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை பளுதூக்கும் போட்டிகள் கடந்த 2021 ஏப்ரல் 22 ம் திகதி மற்றும் 23ம் திகதி ஏக்கல விமானப்படை தளத்தில் வெற்றிகரமாக இடம்பெற்று முடிந்தது.
இந்த போட்டிகளில்ஹிங்குராகோட மற்றும் கொழும்பு விமானப்படை அணியினர் முறையே ஆண் மற்றும் பெண் பளுதூக்கும் பிரிவில் வெற்றிபெற்றனர் இதன் 02ம் இடத்தை கொழும்பு மற்றும் தியத்தலாவ விமானப்படை அணியினர் ஆண்கள் பிரிவிலும் ,ஹிங்குரகோட விமானப்படை அணியினர் பெண்கள் பிரிவில் பெற்றுக்கொண்டனர்.
இந்த போட்டி நிகழ்வில் விமானப்படைபிரதி தலைமை தளபதி எயார் வைஸ் மார்ஷல் ரொட்ரிகோ அவர்கள் பிரதான அதிதியாக கலந்துகொண்டார் மேலும் விமானப்படை பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் ,படைவீர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

















