ஆளில்லா ட்ரான் விமானங்களை பயன்படுத்தி போக்குவரத்து கண்காணிப்பு பணிகளுக்கு இலங்கை காவல்துறையினருக்கு இலங்கை விமானப்படை பங்களிப்பு
4:10pm on Sunday 12th December 2021

ஆளில்லா வான்வழி விமானங்கள்  (UAV) மற்றும் ட்ரான் விமானிகள்  இயக்குவதில் தொழில்நுட்ப ரீதியாக அனுபவம் வாய்ந்த முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இலங்கை விமானப்படை கடந்த  06 மே 2021 விசேட அதிரடிப்படை (STF) மற்றும் இலங்கை  பொலிஸாருடன்  இனைந்து  நுகேகொட பகுதியில் போக்குவரத்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்

இந்த வேலைத்திட்டத்தில் விமானப்படையைச் சேர்ந்த ட்ரோன் இயக்குனர்கள் , விசேட அதிரடிப்படை மற்றும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் ஆகியோரின் பங்கேற்புடன் நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கைகளின் நோக்கம் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்களைக் கண்காணிப்பதும், நெரிசலைக் குறைப்பதில் தலையீடு தேவைப்படும் இடங்களுக்கு காவல்துறை அதிகாரிகளை வழிநடத்துவதும் ஆகும்

 இந்த தொழிநுட்ப அமைப்பின்மூலம்  காவல்துறை அதிகாரிகளுக்கு மோட்டார் போக்குவரத்துச் சட்டங்களை மீறுவதைக் கண்காணிக்கவும், ட்ரோன்கள் மூலம் பெறப்பட்ட காட்சிகளை அத்தகைய குற்றவாளிகளுக்கு எதிராகப் பயன்படுத்தவும் உதவும்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை