இலங்கையின் 12வது தேசிய போர் வீரர்கள் நினைவு தினம்
5:07pm on Sunday 12th December 2021
இலங்கை வரலாற்றின் முக்கிய நாட்களில் ஒன்றான இலங்கையின் போர் வீரர்கள் நினைவு தினமும் ஒன்றாகும் அந்தவகையில் இலங்கையின் 12வது தேசிய போர் வீரர்கள் நினைவேந்தல் விழா இலங்கை சோசலிச ஜனநாயகக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதியின் ஆயுதப்படை தளபதியுமான அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இடம்பெற்றது

 கொவிட் 19 தொற்றினால்  எமது நாடு முடங்கியுள்ள நிலையிலும் ரணவிரு  சேவா அதிகாரசபை பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து  எனது நாட்டிற்காக முப்படையினர் மற்றும் காவல்துறையினர் ஆகியோரின் ஈடு இணையற்ற தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஒரு வசீகரமான மற்றும் தேசப்பற்று மிக்க ஒரு நிகழ்வினை ஏற்பாடு செய்தது  முப்படையினர் பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு சேவைகள் உள்ள அனைவரும் எமது நாட்டிற்காக எமது நாட்டின் நிலையான சமாதானத்தை மீட்டெடுப்பதில் அவர்களின் நிலையான தியாகத்தை நினைவு கூறும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது

 அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் வருகையை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது உடன் இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் உயிர் தியாகம் செய்த போர் வீரர்களுக்காக  செலுத்தப்பட்டது

 இந்த நிகழ்வின் ஆரம்ப உரையை ரணவிரு சேவா அதிகாரசபை என்பதில் தலைவி திருமதி சோனியா கோட்டேகோடஅவர்கள் நிகழ்த்தினார் அதனைத் தொடர்ந்து போர் வீரர்கள் நினைவேந்தல் அறிக்கை பிரகடனப்படுத்தப்பட்டதுஇலக்கம் 4 விஐபி ஹெலிகாப்டர் படைப்பிரிவின்  3 பெல் 412 ஹெலிகாப்டர்கள் மூலம் 90 அடி உயரத்தில் பறந்து நினைவு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது

அதனைத் தொடர்ந்து அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் ரணவிரு நினைவுத் தூபிக்கு முன்பாக மலர்வளையம் வைத்து அதனை தொடர்ந்து கௌரவ  பிரதமர் அவர்களும் மலர் அஞ்சலி செலுத்தினார் அதனைத் தொடர்ந்து இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் மற்றும் அதனைத் தொடர்ந்து நீர்ப்பாசன அமைச்சரும் தேசிய பாதுகாப்பு உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ச மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் தி எயார் போர்ஸ் ரொஷான்  குணதிலக்க மற்றும் முன்னாள் கடற்படை தளபதிஅட்மிரல் ஆஃப் த பிலீட் வசந்த கரன்னாகொட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் ஓய்வுபெற்ற கமால் குணரத்ன இராணுவத் தளபதியின்  ஜெனரல்  சவேந்திர சில்வா மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உளுகேதென்ன மற்றும் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன் பத்திரன  ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர் இந்த நிகழ்வில் மட்டுப்படுத்தப்பட்டு எண்ணிக்கையான உயிரிழந்த போர்வீரர்களின் உறவினர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது  இறுதியாக முப்படையினரின் ஆனால் பாரம்பரிய இறுதி வணக்கத்துடன் இந்த விழா நிறைவுக்கு வந்தது

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை