கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தின் வீரர்களினால் இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் கப்பலில் இருந்து வெளியாகி கரையொதுங்கிய கழிவுகளை அகற்றப்படும் பணிகள் இடம்பெற்றன
5:34pm on Sunday 12th December 2021
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் பாதுகாப்பு அமைச்சிடம் தெரிவிக்கப்பட்டு கோடி கோரிக்கையை முன்னிட்டு இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களின் உத்தரவின் பேரில் எக்ஸ்பிரஸ் கப்பலில் இருந்து வெளியாகிய கரையொதுங்கிய கழிவுகளை அகற்றும் பணிகள் கடந்த 2021 செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது

இதன்போது மனிதர்களுக்கும் இயற்கைச் சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் கரையொதுங்கிய நச்சுப் பொருட்கள் மற்றும் அசுத்தமான பொருட்கள் அனைத்தும் சுத்தம் செய்யும் நடவடிக்கைகளில் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட படைவீரர்கள் மேற்கொண்டனர்

 மேலும் இந்த நிகழ்வில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையினர் கலந்துகொண்டனர்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை