கனுகஹவெவ மாதிரி கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட யானை பாதுகாப்பு வேலிகள் பொதுமக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது
2:29pm on Thursday 23rd June 2022
கனுகஹவெவ மாதிரிக் கிராமத்தில் யானை வேலித் திட்டம் நிறைவடைந்து பொது மக்கள் மற்றும் வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திடம் கடந்த 2022 மே 10 ம்  திகதி  மொறவெவ விமானப்படையின் கட்டளை அதிகாரி குரூப் கப்டன் லலித் சுகததாச அவர்களால் கையளிக்கப்பட்டது.விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், ஒரு சமூக சேவைத் திட்டமாக, மொரவெவ விமானப்படை தளத்தினால்  இந்தக் கட்டுமானத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

14 கிலோமீற்றர் நீளமான இந்த யானை வேலியானது 314 குடும்பங்களுக்கு தமது உயிர்கள், உடமைகள் மற்றும் நெல் வயல்களை காட்டு யானைகளின் தொல்லைகளில் இருந்து பாதுகாக்க வசதியாக அமையும். யானைகளால் பயிர்களுக்கு ஏற்படும் கணிசமான சேதத்தைத் தடுக்கவும், யானைகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையே ஆழமாக வேரூன்றியிருக்கும் மோதலை நிறுத்தவும் இது பெரிதும் உதவியாக இருக்கும். மொரவெவ விமானப்படை தளத்தின் வீரர்கள் இந்த பணியை நான்கு மாதங்களுக்குள் முடித்தனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை