ஜெனரல் காலித் சமீம் வைன் இலங்கை விமானப்படைக்கு விஜயம்
12:00pm on Wednesday 28th March 2012
பாகிஸ்தானின் கூட்டுப்படைகளின் தலைவரான ஜெனரல் காலித் சமீம் வைன் அவர்கள் கடந்த 19 மார்ச் 2012ம் திகதியன்று இலங்கை விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம அவர்களை, விமானப்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் அவர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் முப்படைகளின் தளபதிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
மேலும் இங்கு இருவருக்கும் இடையில் சுமுக கலந்துரையாடல் இடம்பெற்ற அதேநேரம் நினைவுச்சின்னங்களும் பரிமாரப்பட்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் இங்கு இருவருக்கும் இடையில் சுமுக கலந்துரையாடல் இடம்பெற்ற அதேநேரம் நினைவுச்சின்னங்களும் பரிமாரப்பட்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.