சேவா வனிதா பிரினால் விசேட நன்கொடை தீட்டம் மேற்கொள்ளப்பட்டது
3:50pm on Thursday 23rd June 2022
சேவா  வனிதா பிரிவின் தலைவி திருமதி சார்மினி பத்திரன  அவர்களினால்  கொழும்பு  விமானப்படை தலைமை காரியாலயத்தில்   கடந்த 2022 ஜூன் 08ம் திகதி  விமானப்படை அங்கத்தவரின் குடும்ப உறுப்பினருக்கு நான்குசக்கர நாற்காலி ஓன்று நன்கொடையாக வழங்கப்பட்டது  

மேலும் சார்ஜென்ட் பண்டார PRUNP இன் மகன் மற்றும் திரு. BMDCP முனசிங்கவின் தாயார் போன்ற தகுதியுள்ள நபர்களுக்கு இந்த நாற்காலிகள் வழங்கிவைக்கப்பட்டது  பிளைட்  சார்ஜென்ட் நாரம்பனாவ  (ஓய்வு பெற்றவர்) அவர்களுக்கு விசேட மின்சார சக்கர நாற்காலி ஒன்றும் விமானப்படை  பிரதிப்தலைமை  தளபதி எயார் வைஸ் மார்ஷல் துஷ்யந்த ரத்நாயக்க மற்றும் அவரது அன்புத் துணைவியார் திருமதி மாலிகா ரத்நாயக்க ஆகியோரால் அவரது இல்லத்தில் சில நாட்களுக்கு முன்னர் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் விமானப்படை செயலாளர் குரூப் கெப்டன் அனுருத்த விஜேசிறிவர்தன மற்றும் சேவா வனிதா பிரிவின் செயலாளர் விங் கமாண்டர் சுரேஷ் பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை