இல.06 ஹெலிகொப்டர் பிரிவின் 19வது நிறைவாண்டு விழா
1:06pm on Wednesday 28th March 2012
இலங்கை விமானப்படையின் அநுராதபுரம் முகாமின் இல.06 ஹெலிகொப்டர் பிரிவின் 19வது நிறைவாண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வானது விஷேட அணிவகுப்பினை தொடர்ந்து ஆரம்பமானதுடன், இது கட்டளை அதிகாரி 'விங் காமான்டர்' காலிங்க மஹிபாலவினால் பரிசோதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இவ்விழாவின் நிமித்தம் சிரமதான நிகழ்ச்சி ஒன்ரு அநுராதபுரம் பிரதேச "சங்கமித்தா ஆராமய" விகாரயில் மற்றும் தம்மன்னாகுலம் வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இவ்விழாவின் நிமித்தம் விஷேட மத வழிபாடுகள் ஜய ஷீரீ மஹா போதியில் இடம்பெற்றதுடன் அங்கு தாய் நாட்டிற்காக உயிர்நீத்தவர்களுக்காக பிராத்தனைகளும் இடம்பெற்றன.

அத்தோடு விழாவின் ஓர் கட்டமாக கிரிககெட் சுற்றுப்போட்டியொன்று ஏற்பாடு செய்யப்பட்டதுடன், அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்ட அதேநேரம் இறுதியாக அனைவரினதும் சுமுக ஒன்றுகூடலுடன் விழா நிறைவடைந்தது.









Shramadana Campaign at the ‘Sangamiththa Aramaya'




Research and Development Competition




Formation Day Celebrations


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை