எயார் வைஸ் மார்ஷல் துஷ்யந்த ரத்னாயாக அவர்கள் விமானப்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்
4:23pm on Thursday 28th July 2022
இலங்கை விமானப்படையில் 34 வருடங்கள் மகத்தான சேவையாற்றிய இலங்கை விமானப்படையின் பிரதி தலைமை தளபதியாக கடமையாற்றிய எயார் வைஸ் மார்ஷல் துஷ்யந்த ரத்னாயாக அவர்கள் விமானப்படை சேவையிலிருந்து கடந்த 2022 ஜூலை 27ஆம் திகதி ஓய்வு பெற்றார்
அவருக்கான பிரியாவிடை நிகழ்வுகள் இலங்கை விமானப்படை தலைமைக்காரியாலயத்தில் இடம்பெற்றது தெரிவித்தார் நீண்ட காலமாக இலங்கை விமானப்படையில் இணைந்து நாட்டுக்காக மகத்தான அலப்பெரும் சேவையாற்றிய எயார் வைஸ் மார்ஷல் துஷ்யந்த ரத்னாயாக அவர்களுக்கு இதன்போது இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களினால் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார் இதன்போது மேலும் தனது வாழ்த்துக்களையும் விமானப்படை தளபதி அவருக்கு தெரிவித்தார் இறுதியாக இலங்கை விமானப்படை தலைமையகத்தில் இருந்து இராணுவ அணிவகுப்பு மரியாதை உடன் வழி அனுப்பி வைக்கப்பட்டார்
எயார் வைஸ் மார்ஷல் துஷ்யந்த ரத்னாயாக அவர்கள் 1987 ஜூலை 6ஆம் திகதி 18 ஆவது கடேட் பயிற்சி நெறியில் இணைந்து கொண்டு 1989 ஆம் ஆண்டு விமான பொதுப்பொறியியல் பிரிவில் அதிகாரியாக இணைந்து கொண்டார் அவர் தனது பயிற்சி காலத்தில் ஆரம்ப அடிப்படை பயிற்சியினை தியதளாவ விமானப்படை தளத்திலும் தொழில்நெறி பயிற்சியினை சீனவராய விமானப்படை தளத்திலும் மேற்கொண்டார் அவர் தனது சேவை காலத்தில் சீனவராய விமானப்படை கல்வி பீடத்தில் அமைந்துள்ள கனிஷ்ட கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியிலும், படலந்த சிரேஸ்ட கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியிலும் பயிற்சி நெறிகளை வெற்றி கரமாக நிறைவு செய்தார்
மேலும் விமான பராமரிப்பு பயிற்சி நெறியினை அமெரிக்காவில் உள்ள விமானப்படையிலும் தரைவழி பராமரிப்பு பயிற்சி நெறியினை பாகிஸ்தானிலும் சிரேஷ்ட பொறியியல் மேலாண்மை பயிற்சி நிலையினை இந்தியாவிலும் நிறைவு செய்தார் மேலும் விமான விபத்து தொடர்பான விசாரணைக்கான பயிற்சி நெறிகளை பாகிஸ்தானிலும் பெல் ரக ஹெலிகாப்டர்களுக்கான பராமரிப்பு பயிற்சியை சிங்கப்பூரிலும் மேற்கொண்டார் மேலும் கொத்தனாவது பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் முதுமானி பட்டத்தினையும் பெற்றார்
இலங்கை விமானப்படையில் தனது சேவை காலத்தில் இல 02 போக்குவரத்து படை பிரிவு இல 04 ஹெலிகாப்டர் படைப்பிரிவு ஆகியவற்றில் பொறியியல் அதிகாரியாக கடமையாற்றினார் மேலும் அவர் இல 07 ஹெலிகாப்டர் படை பிரிவின் பராமரிப்பு கட்டளை அதிகாரியாகவும் இலங்கை விமானப்படை பொறியியல் பணிப்பகத்தின் பணியாளராகவும் மற்றும் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள விமான உதிரிப்பாகங்கள் மேலாண்மைப் பிரிவின் கட்டளை அதிகாரியாகவும் இலங்கை விமானப்படை விமான பொறியியல் பணிப்பாகத்தின் பிரதிப் பணிப்பாளராகவும் பின்பு பனிப்பாளராகவும் கடமை ஆற்றினார் இறுதியாக இலங்கை விமானப்படையில் பிரதி தலைமை தளபதி ஆக கடமையாற்றினார்
அவர் தனது சேவை காலத்தில் இலங்கை விமானப்படையில் 50வது வருட பூர்த்தி பதக்கம், ஐம்பதாவது சுதந்திர தினத்திற்கான பதக்கம்,வடக்கு மனிதாபிமான நடவடிக்கைக்கான பதக்கம், மேலும் கிழக்கு மனிதாபிமான நடவடிக்கைக்கான பதக்கம், பூரணபூமி பதக்கம்ஆகியவற்றை பெற்றுள்ளார்.