எயார் வைஸ் மார்ஷல் தில்ஷான் வாசகே அவர்கள் விமானப்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்
12:58pm on Tuesday 9th August 2022
இலங்கை விமானப்படையில்   35 வருடங்கள் மகத்தான சேவையாற்றிய கொழும்பு  விமானப்படைதளத்தின் கட்டளை அதிகாரியாக  கடமையாற்றிய  எயார் வைஸ் மார்ஷல் தில்ஷான் வாசகே   அவர்கள் விமானப்படை சேவையிலிருந்து கடந்த 2022 ஆகஸ்ட் 08 ஆம் திகதி ஓய்வு பெற்றார்.

அவருக்கான பிரியாவிடை நிகழ்வுகள் இலங்கை விமானப்படை   தலைமைக்காரியாலயத்தில்  இடம்பெற்றது   நீண்ட காலமாக இலங்கை விமானப்படையில் இணைந்து நாட்டுக்காக மகத்தான அலப்பெரும் சேவையாற்றிய  எயார் வைஸ் மார்ஷல்தில்ஷான் வாசகே   அவர்களுக்கு இதன்போது இலங்கை விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களினால்   நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்  இதன்போது  மேலும் தனது வாழ்த்துக்களையும் விமானப்படை தளபதி அவருக்கு தெரிவித்தார் மேலும் அவரின் சேவை இலங்கை விமானப்படை வரலாற்றில் பொறிக்கப்படவேண்டிய சேவையினை தாய்நாட்டிற்க்காக வழங்கியதாக தெரிவித்தார்  இறுதியாக இலங்கை விமானப்படை தலைமையகத்தில் இருந்து இராணுவ அணிவகுப்பு மரியாதை உடன் வழி அனுப்பி வைக்கப்பட்டார்.

எயார் வைஸ் மார்ஷல் தில்ஷான் வாசகே   அவர்கள் 1987 ஜூலை 6ஆம் திகதி 18 ஆவது கடேட் பயிற்சி நெறியில் இணைந்து கொண்டு  1989 ஆம் ஆண்டு ரெஜிமென்ட் பிரிவில் அதிகாரியாக இணைந்து கொண்டார். அவர் தனது பயிற்சி காலத்தில் ஆரம்ப அடிப்படை பயிற்சியினை  தியதளாவ விமானப்படை தளத்திலும் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அடிப்படை நிர்வாகத்திலும் அடிப்படை போர் பயிற்சி மற்றும் கிளை பயிற்சியை வெற்றிகரமாக மேற்கொண்டார்  1989ம்  ஆண்டு அவர் தனது சேவையை  ரத்மலான விமானப்படை தளத்தில் 01 ம் படைப்பிரிவில் அதிகாரியாக சேவையை ஆரம்பித்தார் மேலும் அம்பாறை மற்றும் அனுராதபுர ஆகிய படைத்தளங்களில்  விசேட சேவையையும் மேற்கொண்டுள்ளார் 

மேலும் அவர் ஹெலிகாப்டர் விமானியாக இந்திய விமானப்படையில் பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளார்  1996 தொடக்கம் 2001 வரை ஹிங்குரகோட விமானப்படை தளத்தில் இல 07  ஹெலிகாப்டர் படைப்பிரிவில் விமானியாக 1600 மணிநேரம் சேவையாற்றியுள்ளார் மேலும் ஆளில்லா விமான இயங்குனாராக 1500 மணிநேரம்  இயக்கியுள்ள அவர் ஒரு சிறந்த ஆளில்லா விமான பயிற்சியாலாளரும் ஆவர்

அவர் தனது சேவை காலத்தில்   பாகிஸ்தானில் பணியாளர் கல்லூரியில் பல்வேறு தொழில்முறை பயிற்சிநெறியை மேற்கொண்டார் இஸ்ரேலில்  உள்வாரி விமானி மற்றும்   சர்ச்சர் மார்க்  II மாற்றுதல் பயிற்சிநெறி,  திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்விப்பீடத்தில்  நீச்சல் பயிற்சியாளர் பயிற்சிநெறி ,இஸ்ரேலில்  ஆளில்லா விமான உள்வாரி விமானி பயிற்சிநெறி அமெரிக்காவில் சர்வதேச புலனாய்வு பயிற்சிநெறி ஜெனரல் சர் ஜான் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் மேலாண்மையில் முதுகலை அறிவியல் (பாதுகாப்பு ஆய்வுகள்) பயிற்சிநெறி,  பாகிஸ்தானில் உள்ள வான் போர்  கல்லூரியில் சிரேஷட் கட்டளை மற்றும் பணியாளர் பயிற்சிநெறி 2014 ம் ஆண்டு அமெரிக்காவில் உயர் பாதுகாப்பு ஒத்துழைப்பு பயிற்சிநெறியையும் மேற்கொண்டுள்ளார்

அவர் தனது சேவை காலத்தில் 2002 ஆண்டு வவுனியா  விமானப்படை தளத்தில் அமைத்துள்ள இல 111 ஆளில்லா விமான படைப்பிரிவில் கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்றார் மேலும், C4ISR திறன்களை (கட்டளை, கட்டுப்பாடு, தொடர்பு, கணினி, நுண்ணறிவு, கண்காணிப்பு மற்றும் உளவுத்துறை) செயல்படுத்த நெட்வொர்க் மூலம் ஆளில்லா ஏரியல் வாகனங்கள் மற்றும் பீச்கிராஃப்ட் ஆகியவற்றின் நிகழ்நேர படங்களை மாற்றுவதற்காக விமானப்படை தலைமையகத்தில் போர் மேலாண்மை கட்டளை மையத்தை வடிவமைத்து நிறுவினார்.

புலனாய்வு நடவடிக்கைகளில் தேர்ச்சி பெற்ற அவர், விமானப் புலனாய்வு அதிகாரி, கட்டளைப் புலனாய்வு அதிகாரி மற்றும் இறுதியாக கொழும்பு விமானப்படைத் தலைமையகத்தில் விமானப் புலனாய்வுப் பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார்

எயார் வைஸ் மார்ஷல் வாசகே அவர்கள் , வீரவில, மற்றும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விமானப்படை தளம்   மற்றும் இறுதியாக கொழும்பு    இலங்கை விமானப்படை தளம் ஆகியவற்றின்  கட்டளை அதிகாரியாக கடமையாற்றினார்

அவர் தனது சேவை காலத்தில்  உத்தம சேவா பதக்கம்,  நீண்ட சிறந்த செவைக்கான  பதக்கம் பாராட்டுக்கள் மற்றும் செயற்ப்பாட்டு சேவைப்பதக்கம்களையும் பெற்றுள்ளார்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை