இல 70 கனிஷ்ட கட்டளை மற்றும் பணியாளர் பயிற்சிநெறியின் நிறைவு வைபவம்
9:01am on Wednesday 17th August 2022
இல 70  கனிஷ்ட கட்டளை மற்றும் பணியாளர் பயிற்சிநெறியின் நிறைவு வைபவம் கடந்த 2022 ஆகஸ்ட் 12 ம் திகதி  சீனவராய விமானப்படை கல்விப்பீடத்தில் இடம்பெற்றது இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக  விமானப்படை விமான பொறியியல் பணிப்பளார் எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன ரணசிங்க அவர்கள் கலந்துகொண்டார்  

இந்த பயிற்சிநெறியை  30 அதிகாரிகள் 14 வாரங்கள் மேற்கொண்டுள்ளனர் அவர்களுல்  28 இலங்கை விமானப்படை  ஸ்கொற்றன் ளீடர்  மற்றும் பிளைட் லேப்ட்டினால்  ஆகிய நிலை அதிகாரிகளும் ஒரு கடற்படை அதிகாரியும்  சாம்பியா நாட்டு ஒரு விமானப்படை  அதிகாரியும் இந்த பயிற்சிநெறியில் இணைந்துகொண்டனர்  

இந்த பயிற்சிநெறிக்கு   சார் ஜான் கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன் இந்த பயிற்சிநெறியை நிறைவுசெய்தவர்களுக்கு பாதுகாப்பு மேலாண்மை பிரிவின் முதுகலை டிப்ளோமா  பட்டமும் வழங்கப்படும்

இந்த நிகழ்வில் உரையாற்றிய கல்லூரியின் கட்டளை அதிகாரி குரூப் கப்டன் சமன் தசநாயக்க அவர்கள் பேசுகையில் தாம்  பெற்ற அறிவை விமானப்படை மற்றும் தேசத்தின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், இலங்கை விமானப்படை அதிகாரிகளுக்கு ஒருமைப்பாடு முக்கியமானது என்பதையும் வலியுறுத்தினார்.  
இல  70 கனிஷ்ட  கட்டளை மற்றும் பணியாளர்கள் பாடநெறியின் விருது வென்றவர்கள் விபரம்

சிறந்த சகலதுறை  அதிகாரி
ஸ்கொற்றன் ளீடர்  GDTD ஜெயவர்தன (பொது கடமைகள் விமானி)


கல்வித்துறையில் சிறந்த மாணவர்
ஸ்கொற்றன் ளீடர்  GDTD ஜெயவர்தன (பொது கடமைகள் விமானி)

சிறந்த புத்தக விமர்சனம்
ஸ்கொற்றன் ளீடர்  WTU பெர்னாண்டோ (வளங்கள் பிரிவு )

சிறந்த பொதுப் பேச்சாளர்
ஸ்கொற்றன் ளீடர்  எம்.டி.ஹெட்டியாராச்சி (பொதுக் கடமைகள் விமானி)

சிறந்த விளையாட்டு வீரர்
ஸ்கொற்றன் ளீடர்  எச்.எச்.டி.ஜீவந்த (ரெஜிமென்ட்)


மேலாண்மைப் படிப்பில் சிறந்தவர்
பிளைட் லெப்டினன்ட்   HPVRS ரத்னசூரிய (ரெஜிமென்ட்)


வான் சக்தி  படிப்புகளில் சிறந்த அதிகாரி
பிளைட் லெப்டினன்ட் எல்.ஆர்.வீரசேகர (பொது கடமைகள் விமானி)

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை