கட்டுநாயக்க விமானப்படை பிரதான காவலர் அறைக்கு புதிய சூரிய மின்சக்தி அமைப்பு நிர்மாணம்
9:23am on Monday 5th September 2022
எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களின்  வழிகாட்டலின்கீழ் நாட்டில் நிலவும் மின்வெட்டு  பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் விமானப்படையினரால் புதிய திட்டம்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது

இந்த திட்டத்திற்கு விமானப்படை கட்டளை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அதிகாரி  குரூப் கப்டன் சந்திமால் ஹெட்டியாராச்சி தொழிநுட்ப பணியக அதிகாரி குருப் கேப்டன் கொழித்த அபயசிங்க , கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின்  கட்டளை அதிகாரி குருப் கேப்டன் மலித குமாரகே மற்றும் இயந்திர மற்றும் மின் பொறியியல் பிரிவு கட்டளை அதிகாரி  குரூப் கப்டன் கிரிஷாந்த ஹேவாபத்திரன, இயந்திரவியல்மற்றும் மின் பொறியியல் பிரிவின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் அனில் ஹத்துருசிங்க ஆகியோர் இந்த புதிய திட்டத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளனர்

இதன் முதல் கட்டமாக கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் 05கிலோ வோட்ஸ்  (KW )  சூரியசக்தி அமைப்பு  கடந்த 2022  ஆகஸ்ட் 23 ம் திகதி கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர்  லசித சுமணவீர அவர்களினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது

 இதன்மூலம் ஒருநாளைக்கு 8.13 kwh  மின் உற்பத்தி செய்யப்படுகிறது அதாவது ஒருநாளைக்கு பிரதான காவலரையின் மின்தேவையின் 66.3 வீதத்தினை பெறமுடியும் இதன்மூலம்  மின்சார செலவில் 0.7 மில்லியன் ரூபாயினை மிகுதம் செய்யமுடியும்

மேலும் எதிர்காலத்தில்  இதுபோன்ற திட்டம்களை மேற்கொள்ள நடவடிக்கைள் மேற்கொள்ளபட்டுவருகின்றது

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை