எயார் வைஸ் மார்ஷல் பாலித பாலசூரிய அவர்களை விமானப்படை சேவையில் இருந்து ஓய்வுபெற்றார்
10:15am on Monday 5th September 2022
யார் வைஸ் மார்ஷல் பாலி அவர்கள் 34 வருட விமானப்படை சேவையில் இருந்து கடந்த 2022 ஆகஸ்ட் 26 ம் திகதி ஓய்வுபெற்றார் அவர் விமானப்படையின் இலங்கை விமானப்படையின் இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் பணிப்பாளராக கடமையாற்றினார்
அவருக்கான உத்தியோகபூர்வ பிரியாவிடை விமானப்படை தலைமையகத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டது விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன அவர்களினால் நினவுச்சின்னம் வழங்கிவைக்கப்பட்டது மேலும் தனது வாழ்த்துக்களையும் விமானப்படை தளபதி தெரிவித்தார் இறுதியாக விமானப்படை வர்ணஅணிவகுப்பு படைப்பிரிவினால் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது

எயார் வைஸ் மார்ஷல் பாலித பாலசூரிய 1988 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி இலங்கை விமானப்படையில் கேடட்டாக இணைந்தார் மேலும் 1989 ஆம் ஆண்டு இலத்திரனியல் பொறியியல் பிரிவில் விமானியாக நியமிக்கப்பட்டார்.பயிற்சிக் காலத்தில் தனது அடிப்படைக் கல்வியை வெற்றிகரமாக நிறைவுசெய்த அவர் தியத்தலாவ விமானப்படை போர் பயிற்சி பள்ளியில் அடிப்படை பயிற்சியினையும் சீனவராய விமானப்படை கல்விப்பீடத்தில் அடிப்படை நிர்வாகம் மற்றும் கிளை பயிற்சி வகுப்புகளை மேற்கொண்டார் மேலும் அவர்சீனக்குடா விமானப்படை கல்விபீட கல்லூரியில் கனிஷ்ட கட்டளை மற்றும் பணியாளர்கள் பாடநெறியை முடித்துள்ளார் மற்றும் ஜெனரல் சேர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு முகாமைத்துவத்தில் முதுகலைப் பட்டம் மற்றும் பாதுகாப்பு முகாமைத்துவத்தில் இளங்கலைப் பட்டத்துடன் நல்ல கல்விப் பின்னணியைக் கொண்டுள்ளார்.
எயார் வைஸ் மார்ஷல் பாலசூரிய வானொலி தொடர்பாடல், தொலைத்தொடர்பு, ரேடார் மற்றும் வானூர்தி ஆகிய துறைகளில் நிபுணத்துவத்துடன் இலத்திரனியல் பொறியியல் பிரிவில் பரந்த அளவிலான அனுபவத்தைப் பெற்றுள்ளார். அவரது மகத்தான சேவைக்காலத்தில் விமான கம்பி சேணங்களை புனையக்கூடிய வசதியை அறிமுகப்படுத்திய பெருமையை தனதாக்கிக்கொண்டார் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரியாகவும் தகுதி பெற்றவராவார்.
எயார் வைஸ் மார்ஷல் பாலசூரிய அவர்கள் இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் பணிப்பாளராக பதவியேற்கும் முன்னர் இலங்கை விமானப்படையின் கட்டளை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

அவரது சிறந்த மற்றும் முன்மாதிரியான சேவைக்காக, இலங்கை ஆயுத சேவைகள் நீண்ட சேவை பதக்கம் மற்றும் "உத்தம சேவா பதக்கம்" அவருக்கு வழங்கப்பட்டுள்ளது..