விமானப்படை கொடிகளுக்கான ஆசீர்வாத விசேட பூஜை வழிபாடு கதிர்காமம் ருஹுனு மஹா தேவாலயத்தில் இடம்பெற்றது
2:44pm on Monday 5th September 2022
இலங்கை விமானப்படை வரலாற்றில் முதல் முறையாக கதிர்காமம்  புனித  கிரி வெஹரவில் இலங்கை விமான படையின் 71 வது வருட  நிறைவினை கொண்டாடும் வகையில்  அனைத்து படைத்தளங்களின் கொடிகளுக்குமான ஆசீர்வாத பூஜை கடந்த 2022 ஆகஸ்ட் 27 ம் திகதி இடம்பெற்றது

 இந்த நிகழ்வுகள் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களின் வழிகாட்டலின் கீழ் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி  ஷார்மினி பத்திரன அவர்களின் அவர்களின் பங்கேற்புடனும் இடம்பெற்றது

இதன் போது ஊர்வலம் மற்றும் நடனங்களுடன் மலர் பூஜை வழிபாடுகளுடன் வண்ணமயமாக பெரஹர கிரிவெகர வளாகத்துக்குள் சென்றது
 இதன் போது வாழ்த்து துறவிகளுடன் கூடிய வண்ணமயமான  அணிவகுப்பு கிரிவெகர  வளாகத்தில் விமானப்படை கொடிகளுக்கான மத நிகழ்வு வழிபாடுகள் இடம் பெற்றன வழிபாடுகளின் பின்பு அந்த விஹாரதிபதி  வணக்கத்திற்குரிய  கோபாவ தம்மிந்த தேரர் அவர்களினால் சொற்பொழிவும் இடம் பெற்றது

 தீபங்கள் ஏற்றும்  மத சடங்குகள் இடம் பெற்றன  மேலும் விமானப்படையும் அனைத்து படைத்தளங்களின் கொடிகளும் இந்த படைத்தளங்களில் கட்டளை அதிகாரிகளினால் கொண்டுவரப்பட்டு ஆசீர்வாதம் அளிக்கப்பட்டது

விமானப்படை தளபதி மற்றும் விமானப்படை படைப்பாளர்கள் உட்பட விமானப்படை அதிகாரிகளும் மகா தேவாலயத்துக்குள் சென்று ஆன்மீக ஆசீர்வாத வழிபாடுகளையும் மேற்கொண்டனர்

இந்த நிகழ்வுகள் அனைத்தும் வீரவெல விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி  குரூப் கேப்டன் அசோக் கோரளகே அவர்களின் மேற்பார்வையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை