இலங்கை விமானப்படையின் 40வது " குவான்மீதுதகம் '' வான் நட்பு திட்டம் பூவரசம்குளம் வைத்தியசாலையில்
9:13am on Wednesday 14th September 2022
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ஷாமினி பத்திரன அவர்களின் வழிகாட்டலின் கீழ் வன்னி விமானப்படை தளத்தின் மூலம் பூவரசம்குளம் வைத்தியசாலையில் கடந்த செப்டம்பர் 05 ம் திகதி 40 வது " குவான்மீதுதகம் '' வான் நட்பு திட்டம்    வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

இந்த  மருத்துவமனையில் அமைந்துள்ள பிரசவ விடுதியை புனர்நிர்மாணம் செய்யும் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது மேலும் நீரசுத்திகரிப்பு ஆலையொன்றும் நிர்மாணிக்கப்பட்டது

இந்த புதிய கட்டிடம் வன்னி விமானப்படைத்தளத்தின்  கட்டளை அதிகாரி புத்திக பியசிறி அவர்களினால் வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டது  இந்த திட்டத்திற்கான நிதி விமானப்படை சேவா வனிதா பிரிவு மற்றும் வன்னி விமானப்படையினால்  வழங்கிவைக்கப்பட்டது  இந்த நிகழ்வில் அதிகாரிகள் படைவீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை