எயார் வைஸ் மார்ஷல் பிரசந்த பாயோ அவர்கள் விமானப்படை சேவையில் இருந்து ஓய்வுபெற்றார்
11:35am on Wednesday 14th September 2022
எயார் வைஸ் மார்ஷல் பிரசந்த பயோ RWP, RSP, USP, MSc (NSWS - Pak), ndc (Pak),psc  அவர்கள்  இலங்கை விமானப்படையின் 37 வருட மகத்தான சேவையினை நிறைவுசெய்து கடந்த 2022 செப்டம்பர் 12 ம் திகதி ஓய்வுபெற்றார்  அவர் ஓய்வுபெறும்போது இலங்கை விமானப்படை தலைமை தளபதியாக கடமை புரிந்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது

எயார் வைஸ் மார்ஷல் பிரசந்த பாயோ அவர்களை  இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்கள் தனது காரியாலயத்திற்கு அழைத்து  உத்தியோகபூர்வ பிரியாவிடை வழங்கினார் இதன்போது  நினைவுச்சின்னமும்  வழங்கிவைக்கப்பட்டது  தேசத்திற்கும் குறிப்பாக இலங்கை விமானப்படைக்கும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியதற்காக தளபதி அவரைப் பாராட்டினார். மேலும் எங்கள் தாய்நாட்டின் தேவையின் போது அவர் முக்கிய பங்குதாரர்களில் ஒருவராக இருந்தார் என்றும் அவரது வீர வரலாறு விமானப்படையின் வரலாற்றில் பொறிக்கப்படும் என்றும் தளபதி வலியுறுத்தினார். இறுதியாக அவருக்கு விமானப்படை வர்ண அணிவகுப்பு படைப்பிரிவினரால் இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் தலைமை காரியாலயத்தில் இருந்து விடைபெற்றார்

எயார் வைஸ் மார்ஷல் பிரசந்த பாயோ அவர்கள் 19 செப்டம்பர் 12 ம் திகதி  பதுளையில் பிறந்த்தார் பண்டாரவெல புனித தோமஸ் கல்லூரியில் கல்விபயின்ற மாணவரான இவர் சிறந்த மாணவராகவும், சகலதுறையிலும் சிறந்து விளங்கினார்.

1985 டிசம்பர் 16 ம் திகதி இலங்கை விமானப்படையில் இல 15 கடேட்  பயிற்சிநெறியில் இணைத்துக்கொண்ட அவர் 1987 ம் ஆண்டு விமானப்படை பொதுகடமை விமானியாக இணைந்துகொண்டார் தியத்தலாவ விமானப்படை தளத்தில் அடிப்படை பயிற்சியை மேற்கொண்ட அவர்  சீனவராய  விமானப்படை கல்விப்பீடத்தில்  விமான பயிற்சியை மேற்கொண்டார் மேலும் பாகிஸ்தானில் விமான பயிற்சிகளை மேற்கொண்ட அவர் 1988 ம் ஆண்டு  விமானியாக பட்டம்பெற்றார் அதன் பின்பு இல 04 ஹெலிகொப்டர் படைப்பிரிவில் கடமைக்கு நியமிக்கப்பட்டர் அந்த காலத்தில் இருந்து நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத மோதலின் போது நடத்தப்பட்ட ஒவ்வொரு பெரிய நடவடிக்கையிலும் அவர் பங்கேற்றார்.


எயார் வைஸ் மார்ஷல் பிரசந்த பாயோ அவர்கள் அதே நேரத்தில் பல்வேறு  விமான படைப்பிரிவுக்கும் வெற்றிகரமான ஒரு தலைமையை வழங்கியுள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது

அவர் ஆரம்பத்தில் செஸ்னா 150 மற்றும் இலங்கையில் சிப்மங்க் மற்றும் பாகிஸ்தானில் முஷாக் MFI 17 மற்றும் T 37 விமானங்களில் பயிற்சி பெற்றார்.    இலங்கைக்கு திரும்பிய பின்னர் அவர் பெல் 206, பெல் 212, பெல் 412 மற்றும் எம்ஐ 24 ஹெலிகாப்டர்களில்தேர்ச்சிபெற்ற விமானியாக செயற்பட்டார் .   விவிஐபி, விஐபி, போர் மற்றும் தேடல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டதன் மூலம் அவர் 7200 விமானப் பயண நேரத்தைக் கடந்துள்ளார்.

அவர் 2004 ஆம் ஆண்டு கட்டுகுருந்த விமானப்படைத்தளத்தின்  கட்டளை அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர் ஹிங்குராக்கொட விமானப்படை தளத்தின்   இல 7 ஹெலிகாப்டர் படை மற்றும் இலக்கம் 9 தாக்குதல் ஹெலிகொப்டர் படைக்கு கட்டளை அதிகாரியாக கடையாற்றினார் 2005 முதல் 2008 வரை அவர் கட்டுநாயக்கா விமானப்படை தளத்தில் இல  4 வது  விவிஐபி  படைப்பிரிவுக்கு கட்டளையிட்டார். பணியாளர் பாடநெறியை முடித்த பின்னர், அவர் வவுனியா விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரியாக  நியமிக்கப்பட்டார் பின்னர் அவர் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரி சபுகஸ்கந்த விமானப் பிரிவின் தலைமை

பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார். எயார் வைஸ் மார்ஷல் பாயோ, 2010 இல் ரஷ்ய கூட்டமைப்பிற்கான இலங்கை பாதுகாப்பு ஆலோசகராக கௌரவமான நியமனம் பெற்றதன் மூலம் தனது தொழில் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க சாதனையை அடைந்தார்.

மேலும் அவர் தனது சேவை காலத்தில்  வெளிநாடுகளில் பல பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளார் அவரது துணிச்சலுக்காக அவருக்கு ரண விக்கிரம பதக்கம்  மற்றும் ரண சூர பட்டக்கம்  விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை