இலங்கை விமானப்படைக்கு புதிய தலைமை தளபதி நியமனம்
11:41am on Wednesday 14th September 2022
இலங்கை சோஷலிச ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விசக்ரமசிங்க அவர்களின்  அனுமதியில் அடிப்படையில்  எயார் வைஸ் மார்ஷல் உதேனி  ராஜபக்ஷ அவர்கள்  கடந்த 2022 செப்டம்பர் 12 ம் திகதி இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்கள் நியமன கடிதத்தை  தனது அலுவலகத்தில் வைத்து கையளித்தார்

எயார் வைஸ் மார்ஷல் உதேனி  ராஜபக்ஷ அவர்கள் 1988 ம் ஆண்டில் இலங்கை விமானப்படையில் பொதுக்கடமை விமானியாக இணைந்துகொண்டார் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில்  அடிப்படைப் போர்ப் பயிற்சியையும்,  அனுராதபுர விமானப்படைத் தளத்தில் இல 1 விமான பயிற்ச்சி படைப்பிரிவில்   அடிப்படைப் விமானி   பயிற்சியையும் பெற்று, சிறப்பாகச் செயல்பட்டு, 33வது விமானக் கெடட் பாடநெறியில் சிறந்த  கேடட் விமானியாக தெரிவுசெய்யப்பட்டார்.  

அவர்  2007 முதல் 2009 வரை படலந்தாவின் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில் (வான் ) பணிப்பகத்தில்   பணியாற்றினார்.  அதன்பின்பு 2010 ம் ஆண்டு ரத்மலானை விமானப்படை தளத்தின்  இல 02 படைப்பிரிவில் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டார் அதன் பின்னர், அவர் 2011 முதல் 2012 வரை ஹிங்குராங்கொட விமானப்படை தளத்திற்கு கட்டளை அதிகாரியாக கடமையாற்றினார்
 
எயார் வைஸ் மார்ஷல் ராஜபக்ச 2012 முதல் 2014 வரை ரஷ்ய கூட்டமைப்பில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு இலங்கை பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டதன் மூலம் தனது வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை அடைந்தார்.

ரஷ்யாவில் பதவிக் காலம் நிறைவடைந்த பின்னர், அவர் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் சிரேஷ்ட விமானப் பணியாளர் அதிகாரியாக (SASO) நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னர் 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 01 ஆம் திகதி முதல் வவுனியா விமானப்படைத்தள கட்டளை அதிகாரியாக  நியமிக்கப்பட்டார். மேலும், வான்  செயலாளராக . 12 செப்டம்பர் 2016 முதல் 23 ஆகஸ்ட் 2017 வரை மற்றும் 07 ஆகஸ்ட் 2018 முதல் 30 ஜூன் 2019 வரைநியமிக்கப்பட்டார்

மேலும்  எயார் வைஸ் மார்ஷல் ராஜபக்ச அவர்கள் 2020 ஆம் ஆண்டில் சீனக்குடாவின்  விமானப்படை கல்விபீடத்தின்  பீடாதிபதியாகவும்  கிழக்கு வான் கட்டளை  தளபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.பின்னர் அவர் 2021 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப்படை  தளத்தில் பணிபுரிந்த போது,  கட்டுநாயக்க  விமானப்படைதள கட்டளை அதிகாரியாகவும்  தெற்கு வான் கட்டளை  தளபதியாகவும் பின்னர் விமானப்படை வான் செயற்பாட்டு  பணிப்பாளராகவும்  தற்போது இலங்கை விமானப்படை தலைமை தளபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்

அவருடைய சேவைகாலத்தில்  1997 ஆம் ஆண்டில், புகாரா விமானத்தில் இருந்து இரவுநேர செயற்பாட்டின் மூலம்  தனது பங்களிப்பினை வழங்கி சிறந்த பாராட்டுக்களை பெற்றார்  மேலும் மார்ட்டின் பேக்கர் விமான  நிறுவனம்  அவரை அங்கீகரித்து   அவருக்கு உலகின் "எஜெக்ஷன் டை கிளப்" துறந்த உறுப்பினர் பதவியை வழங்கியது. மேலும் அவரின் சேவை காலத்தில் வெளிநாட்டு பயிற்சிநெறிகள்  மற்றும் பலவேறு  விளையாட்டு துறைகளிலும் தனது  பங்களிப்பை வழங்கி பலவிருதுகளையும் பெற்றுள்ளார்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை