10 வது அதிகாரிகளுக்கான விமான பாதுகாப்பு பயிற்சிப்பட்டறை வெற்றிகரமாக நிறைவுக்குவந்தது
10:49am on Thursday 22nd September 2022
10வது  விமானப்படை அதிகாரிகளுக்கான  விமான பாதுகாப்பு பயிற்சிப்பட்டறை ரத்மலான விமானப்படை  தளத்தின் விமான இயந்திரவியல் உதவி படைப்பிரிவில்  கடந்த  கடந்த 2022 செப்டம்பர் 16 ம் திகதி வெற்றிகரமாக இடம்பெற்றது

விமானப்படையின் விமான நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக விமானப்படையின் கட்டளை விமான பாதுகாப்பு ஆய்வாளரால் விமான பாதுகாப்பு பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பயிற்சிநெறியில் பொதுப் பணிகளுக்கான விமானி ,  விமான இயந்திரவியல்  & பொதுப்பொறியியல் , வான்  செயற்பாடு , எலக்ட்ரானிக் இன்ஜினியரிங், வளங்கள் பிரிவு  ரெஜிமென்ட், வைத்திய  மற்றும் சிவில் பொறியியல்  ஆகிய 8 கிளைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பயிற்சிபெற்றனர்

மொத்தமாக 16அதிகாரிகள் இந்த பயிற்சியினை  04  நாட்கள் மேற்கொண்டதோடு திட்டமிட்டபடி இந்த வருடம் 02  பயிற்சிப்பட்டறைகள் வெற்றிகரமாக இடம்பெற்றன  செயல் கட்டளை விமானப் பாதுகாப்பு அதிகாரி, குரூப் கப்டன் டி.எல்.ஹேவாவிதாரன, ஆரம்ப உரையின் போது, செயலமர்வின் நோக்கம் மற்றும் அதன் எதிர்பார்ப்புகளை பங்கேற்பாளர்களுக்கு விளக்கினார்.

பயிற்சிப் பட்டறையின் இறுதியில் பதில் கட்டளை விமானப் பாதுகாப்பு அதிகாரியினால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன, இறுதி உரையை பாடநெறி இணைப்பாளரான விங் கமாண்டர் டபிள்யூ.எம்.கே.என். விக்கிரமசிங்க அவர்கள் குறிப்பிட்டார்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை