இலங்கை விமானப்படையினால் 2022 ம் ஆண்டுக்கான உலக சிறுவர் தின கொண்டாட்டம்கள்
1:33pm on Friday 7th October 2022
" எங்கள் கனவு உலகம் " என்ற தொனிப்பொருளில் அடிப்படையில் 2022 ம் ஆண்டுக்கான  உலக சிறுவர் தின கொண்டாட்ட  நிகழ்வுகள் இலங்கை விமானப்படையின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி .சார்மினி பத்திரன அவர்களின்  வழிகாட்டலின்கீழ் ரத்மலான விமானப்படைத்தளத்தில்  அமைந்துள்ள  அருங்காட்சியக  வளாகத்தில் கடந்த 2022 அக்டோபர் 02 ம் திகதி  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது

அண்மைக்காலமாக நாட்டில் ஏற்பட்டுள்ள தொற்றுநோய் மற்றும் ஏனைய அமைதியின்மை நிலைமைகள் காரணமாக வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் குழந்தைகளின்  மனோநிலையை மற்றும்  நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்த நிகழ்வுகளை  ரத்மலான விமானப்படை கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் நிஹால் ஜயசிங்க  அவர்கள் ஏற்பாடு செய்து இருந்தார்

பாடசாலை மாணவர்களின்  பேண்ட் வாத்திய குழுவினரின் பேண்ட் வாத்தியத்தின்மூலம்  விமானப்படை தளபதி  மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவி ஆகியோரின் வருகை இடம் பெற்றது   இந்த நிகழ்வில்  விமானப்படையின் இசைநிகழ்வு மற்றும் விமானப்படையின் வைத்திய கிளினிக் , மற்றும் மோப்பநாய்களின் சாகசங்கள் மற்றும் மேஜிக் நிகழ்வுகள் என்பன இடம்பெற்றது

இந்த நிகழ்வில் விமானப்படை தலைமை தளபதி மற்றும் ரத்மலான  விமானப்படை கட்டளை அதிகாரி , பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள்  சேவா வனிதா பிரிவின் அங்கத்தவர்கள் மற்றும் விமானப்படையினரின்  குடும்ப அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்




SLAF ESTABLISHMENTS CELEBRATED WORLD CHILDREN’S DAY

SLAF Academy China bay

SLAF Base Anuradhapura


SLAF CTS Diyatalawa


SLAF TTS Ekala


SLAF Base Katunayake

SLAF Station Morawewa

SLAF Station Mullaittivu

SLAF RTS Vanni


SLAF Station Katukurunda
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை