சேவா வனிதா பிரிவினால் சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு கொண்டாட்ட நிகழ்வு
4:08am on Friday 21st October 2022
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷ்ன பத்திரன அவர்களின் வழிகாட்டலின் கீழ் மஹரகமவிலுள்ள “சுசரிதோதய இல்லத்தில்  சர்வதேச முதியோர் தினத்தை” நினைவு கூறும் வகையில் நன்கொடை வழங்கும் நிகழ்வு  2022 அக்டோபர் 03ம்  திகதி  விமானப்படை சேவா வனிதா பிரிவு, திருமதி சார்மினி பத்திரன. அவர்களின் பங்கேற்பில்  நடைபெற்றது.

இந்த இல்லத்தில் விசேட தேவையுடைய 66 முதியோர்கள் உற்பட சிறுவர்களும் உள்ளனர் இதன்போது அவர்களுக்கு புதிய மெத்தைகள், நடமாடும் உபகரணங்கள், உலர் உணவுகள், படுக்கை மற்றும் சுகாதார பொருட்களை வழங்கியதுடன் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில்  விமானப்படை கலிப்சோ இசைக்குழுவின் இசை நிகழ்ச்சியும்  இடம்பெற்றது மேலும் கொழும்பு விமானப்படை நிலையத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சுரேஷ் பெர்னாண்டோ அவர்களின் மேற்பார்வையின் கீழ் விமானப்படை கொழும்பு நிலையத்தினால் சிரமதான நிகழ்வுகளும் இடம்பெற்றது     

இந்த நிகழ்வில் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி மற்றும் விமானப்படை முகாமைத்துவ சபை உறுப்பினர்களின் மனைவிகள், கொழும்பு விமானப்படை நிலையத்தின்  சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ஜெஸ்மின் பெர்னாண்டோ, செயலாளர் சேவா வனிதா பிரிவு, விங் கமாண்டர் சுரேஷ் பெர்னாண்டோ மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவு  பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை