எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன பாலசூரிய அவர்கள் இலங்கை விமானப்படை சேவையில் இருந்து விடைபெறுகிறார்
6:15am on Friday 21st October 2022
எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன பாலசூரிய அவர்கள் கடந்த 2022 அக்டோபர் 07ம் திகதி இலங்கை விமானப்படையின் 35 மகத்தான  சேவையில் இருந்து ஓய்வுபெறுகிறார் அவர் ஓய்வுபெறும் போது, பாதுகாப்புப் படைத் பிரதானியின்   பணிப்பக  பொது  ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களினால் கடந்த 2022 அக்டோபர் 05 ம் திகதி  விமானப்படை தலைமயக்கத்தில் பிரயாவியாடை வழங்கப்பட்டது இதன்போது  தளபதியினால் அவரின் சேவை குறித்து பாராட்டப்பட்டதுடன் அவருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்  இறுதியா  அவர் இலங்கை விமானப்படையின் வர்ண அணிவகுப்பின் இராணுவ மரியாதையுடன் விமானப்படை தலைமையகத்தை விட்டு வெளியேறினார்

எயார் வைஸ் மார்ஷல்  பிரசன்ன பாலசூரிய அவர்கள் 1987ம் ஆண்டு ஜூலை 21ம் திகதி  கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 05ம் பயிற்சிநெறியில் கடேட் அதிகாரியாக   இணைந்து கொண்ட அவர் 1989ம் ஆண்டு  விமானப்படையின் பரிபாலனை பிரிவில் பைலெட் அதிகாரியாக இணைந்துகொண்டார்

அவர் தனது பயிற்சிக் காலத்தில், ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் அடிப்படை போர் பாடநெறி மற்றும் பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார்.1990 ஆம் ஆண்டு பயிற்சியை முடித்த பின்னர் அவர் சிகிரியா விமானப்படை நிலையத்தில் உதவி நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இலங்கை விமானப்படையில் கடமையாற்றும் போது, அவர் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார் விமானப்படை தலைமையக   அமைப்பு நிர்வாக பணிப்பகத்தின் பணியாளர் அதிகாரியாகவும் BMICH இல் பாதுகாப்புப் பணியாளர்களின் தலைமைச் செயலாளராகவும் , நிர்வாக பணிப்பகத்தின் அதிகாரியாகவும் , சபுகஸ்கந்த  பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில்  (DSC&SC) வான் பிரிவின் ,  பணிப்பாக பணியாளாராகவும் நிர்வாக பணிப்பகத்தின் பதில் பணிப்பாளராகவும் , தற்காலிக படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாகவும் கொழும்பு விமானப்படை  தலைமையகத்தில் கட்டளை ஆட்சேர்ப்பு அதிகாரி மற்றும் செயல் கட்டளை அபிவிருத்தி அதிகாரி மற்றும் வான்  செயலாளராகவும் கடமை புரிந்துள்ளார் .

மேலும் அவர் பல்வேறு பட்டபடிப்புகளை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் மேற்கொண்டுள்ளார் மேலும் அவரது இராணுவ வாழ்க்கையின் போது, அவர் விதிவிலக்கான திறமை மற்றும் கறையற்ற நடத்தைக்காக உத்தம சேவா பதக்கமா விருது பெற்றுள்ளார். 'பூர்ண பூமி பதக்கமா', 'வடக்கு மற்றும் கிழக்கு நடவடிக்கை பதக்கம்', '50வது ஆண்டு விழா விமானப்படை  பதக்கம்', 'இலங்கை ஆயுத சேவைகள் நீண்ட சேவை பதக்கம்', 'ரிவிராச பிரச்சார சேவை பதக்கம்', 'ஆகியவை அவருக்கு வழங்கப்பட்ட மற்ற பதக்கங்களாகும். 50வது சுதந்திர ஆண்டு பதக்கம்', முன்மாதிரியான தலைமைத்துவம் மற்றும் அர்ப்பணிப்பு சேவைக்கான வடக்கு மற்றும் கிழக்கு மனிதாபிமான செயல்பாட்டு பதக்கங்கள்.என்பன அவர் பெற்றுள்ளார்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை