கண்டி தலதா மாளிகையில் விமானப்படையினால் வருடாந்த வாய்வழி சுகாதார மருத்துவ முகாம்
10:13am on Tuesday 8th November 2022
கண்டி தலதா மாளிகையில்  விமானப்படையினால் வருடாந்த  வாய்வழி சுகாதார மருத்துவ முகாம்  கடந்த 2022 அக்டோபர் 21 ம் திகதி  விமானப்படை  தளபதி எயர் மார்ஷல் அவர்களின்  வழிகாட்டுதலின்கீழ் விமானப்படை சுகாதார பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் லலித் ஜெயவீர அவர்களின் மேற்பார்வையின்கீழ்   மகா சங்கத்தினர் மற்றும் கண்டி தலதா மாளிகை ஊழியர்கள்  ஆகியோருக்காக  ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது இந்த மருத்துவ திட்டத்தில்  விமானப்படை சார்பாக 09  வைத்தியா ஆலோசகர்கள் மற்றும் 11 மருத்துவர்கள் மற்றும் பல் மருத்துவர்கள் அடங்கலாக 130 வைத்திய ஊழியர்களும் கலந்துகொண்டனர்

மகா விகாரை வாசி ஷாமோபாலி மஹா நிக்காயே அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்க மஹானுவர கெடிகே ரஜமஹா விஹாராதிபதி அதி வணக்கத்துக்குரிய வெடருவே ஸ்ரீ உபாலி அனுநாயக்க தேரரின் ஆசிர்வாதத்துடன் ஸ்ரீ தலதா மாளிகையின் பிரதம பொறுப்பாளர்  டாக்டர் பிரதீப் நிலங்க தேலா மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர், எயார் வைஸ் மார்ஷல் எல்.ஆர்.ஜெயவீர , விமானப்படை நலன்புரி பணிப்பளார் எயார் வைஸ் மார்ஷல் சொயிஸா ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வு தொடங்கப்பட்டது

இந்த  திட்டத்தில்  500 ம் மேற்பட்ட பௌத்த துறவிகள் மற்றும் பொதுமக்கள் உற்பட பலர் கலந்துகொண்டு பலன்களை பெற்றதுடன் மேலும் பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் வைத்திய உபகாரணகளும்  வழங்கிவைக்கப்பட்டது



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை