இலங்கை விமானப்படையினால் காடுகளை மீண்டும் உருவாக்கும் 07 வது வான் வழி விதைக்குண்டு வீச்சு செயல்திட்டம்.
11:24am on Tuesday 8th November 2022
2030 ஆம் ஆண்டில் பசுமைக் விரிவாக்கத்தை  27% முதல் 32% ஆக உயர்த்துவதன் மூலம் நாட்டின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக இலங்கையின் வன அடர்த்தியை மேம்படுத்தும்  நோக்கில் இலங்கையில் வன அடர்த்தியை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றை  விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களின்   வழிகாட்டல்  மற்றும் தலைமையின்கீழ்   இலங்கை  விமானப்படையினரினால் கடந்த 2022 அக்டோபர் 29 ம்  திகதி சியாம்பலா பிரதேச  செயலகத்திற்குட்பட்ட வத்தேகம கபிலித்த வனப்பிரதேசத்தில் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது

வீரவெல  இலங்கை விமானப்படை தளத்தை  மையமாக  கொண்டு இல 04 ஹெலிகொப்டர் படைப்பிரிவிற்கு உரித்தான பெல் 212 ரக ஹெலிகாப்டர் மூலம் 20 தடவைகள் இந்த விதைகுண்டுவீச்சு மேற்கொள்ளப்பட்டது இதன்போது 80 ஏக்கர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் கூலன் , வேம்பு , ஆத்தி , நாகை , புளி , பருத்தி , பாலை , வீரை ,  மருது ,  கித்துள் உற்பட 100,000 விதைகள் தாயரிக்கப்பட்டு வான் வழிமூலம் தெளிக்கப்பட்டன

இலங்கை வன பாதுகாப்பு திணைக்களம் , பேராதெனிய பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள கட்டளை வேளாண்மை பிரிவினால் இந்த வேலைத்திட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டது


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை