2022 ம் ஆண்டுக்கான இந்து பசுபிக் கூட்டு முயற்ச்சி வெற்றிகரமாக நிறைவுபெற்றது
12:59pm on Tuesday 15th November 2022
HMAS அடிலெய்ட் மற்றும் HMAS அன்சாக் ஆகிய இரண்டு (02) ராயல் ஆஸ்திரேலிய கடற்படைக் கப்பல்கள்  கடந்த 2022 அக்டோபர் 25  ம் திகதி  இந்தோ-பசிபிக் கூட்டு முயற்ச்சி 2022 (IPE-22) உடன் இணைந்துகொள்ள  இலங்கைக் கடலுக்கு வந்தன.பிராந்திய பாதுகாப்புப் படைகளுடன் ஆஸ்திரேலியாவின் தொடர்பு மற்றும் கூட்டாண்மையை அதிகரிக்க ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படை இந்த கடல் மற்றும் வான் முயற்சியை முன்னெடுத்தது.

இந்தோ - பசிபிக் முயற்சிக்கான கூட்டு பணிக்குழு கட்டளை தளபதி  கொமடோர் மால் விஸ் அவர்களின் தலைமையில்   இலங்கை விமானப்படை  அதிகாரிகளுக்கு அதன் தெளிவு பகிர்ந்தளிக்கப்பட்டது  மேலும் பல விளையாட்டு நிகழ்வுகளும் இதன்போது ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன இதன்மூலம் இருதரப்பினருக்குமான உறவுகள் அதிகரிக்கும் பல நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டன

இதற்கிடையில், கொக்கலா விமானப்படை நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள ராயல் கனடியன் விமானப்படை போர் நினைவுச்சின்னத்தில் இந்தோ - பசிபிக் முயற்சிக்கான கூட்டு பணிக்குழு கட்டளை தளபதி  கொமடோர் மால் விஸ் அவர்கள் இரண்டாம் உலகப் போரின் போது இலங்கையின் பாதுகாப்பில் உயர்ந்த தியாகம் செய்த ராயல் கனடிய விமானப்படையின் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்  கொக்கல விமானப்படை தளத்தின்   கட்டளை அதிகாரி குரூப் கப்டன் திலின ராஜபக்ஷ அவர்களின் மேற்பார்வையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில்  61 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க, தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஹரீந்திர ஏகநாயக்க, நிலையத்தின் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஏனைய அணிகளும் கலந்துகொண்டனர்.



Friendly Sports Tournaments

 Floral tribute at the Royal Canadian Air Force War Memorial - SLAF Station Koggala
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை