ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 33வது பொது பட்டமளிப்பு விழா
9:03am on Wednesday 16th November 2022
ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 33வது பொது பட்டமளிப்பு விழா கடந்த 2022 நவம்பர் 11 ம் திகதி BMICH இல் நிறைவடைந்தது
இந்த நிகழ்வில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், ஆயுதப்
படைகளின் தளபதியுமான அதிமேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார் 269 முதுகலை பட்டதாரிகள் மற்றும் முதுகலை டிப்ளோமா பெற்றவர்கள் பட்டதாரி கற்கைகள் பீடம் மற்றும் 1350 இளங்கலை பட்டதாரிகள் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பீடங்களில் இருந்து இந்த ஆண்டு பொது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றனர்.
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் 1981 இல் முப்படை அதிகாரிகளின் தொழில்முறையை மேம்படுத்துவதற்காக நிறுவப்பட்டது. இது 2009 ஆம் ஆண்டில் ஒரு முழுமையான பல்கலைக்கழகமாக உயர்த்தப்பட்டது, அதே ஆண்டில் இது சிவிலியன் மாணவர்களுக்கும் திறக்கப்பட்டது. தற்போது, முப்படைகளின் உறுப்பினர்கள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் முனைவர், முதுகலை மற்றும் முதுகலை டிப்ளோமா படிப்புகளை தொடர முடியும்.
தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்கள், பாதுகாப்புப் படைகளின் பிரதானி, ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல். நிஷாந்த உலுகேதென்ன மற்றும்
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன, பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்புப் படையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் ஏனைய பாதுகாப்புப் பிரிவின் தலைவர்கள், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் அதிபர் ஜெனரல் ஜெராட் டி சில்வா, பிரதி அதிபர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் உள்ளிட்டோர் நேற்றைய தினம் கலந்துகொண்டனர்.