2022ம் ஆண்டுக்கான நினைவுதினம் கொழும்பில் இடம்பெற்றது
9:09am on Wednesday 16th November 2022
இலங்கை முன்னாள் படைவீரர் சங்கம் 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி காலை விஹார மகாதேவி உத்யானாவில் "பொப்பி தினம்" என அழைக்கப்படும் நினைவு தினத்தைநினைவு கூறும் நிகழ்வில் உலகப் போரில் உயிரிழந்த போர்வீரர்கள் உட்பட அனைத்து போர் வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது .

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நாயகம் கமல் குணரத்ன (ஓய்வு பெற்றவர்) இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.இந்த நிகழ்வில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன் பத்திரன, பாதுகாப்புப் படைகளின் பிரதானி, இராணுவ ,கடற்படைத் தளபதிகள் , முப்படைகளின் முன்னாள் தளபதிகள் மற்றும் முப்படைகளின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கொழும்பு போர் நினைவுச்சின்னம் முதலில் காலி முகத்திடலில் கட்டப்பட்டது, ஆனால் பின்னர் இரண்டாம் உலகப் போரின் போது, கல்லறை இடிக்கப்பட்டு தற்போது உள்ள இடத்தில் மீண்டும் கட்டப்பட்டது.கல்லறையில் முதலாம் உலகப் போரில் இறந்தவர்களின் பெயர்கள் உள்ளன, அதே நேரத்தில் அதன் பின்னால் உள்ள நினைவுச் சுவரில் இரண்டாம் உலகப் போரில் இறந்தவர்களின் பெயர்கள் உள்ளன.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை