இல 09 தாக்குதல் ஹெலிகாப்டர் படைப்பிரிவின் 27 வது வருட நிறைவுதினம்
ஹிங்குரகோட  விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 09  தாக்குதல் படைப்பிரிவின் 27 வது வருட நிறைவுதினம்  கடந்த 2022 நவம்பர் 24 ம்  திகதி கொண்டாடப்பட்டது

இதனை முன்னிட்டு  படைப்பிரிவின் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் சொயிஸா அவர்களினால்  காலை அணிவகுப்பு பரீட்சிக்கப்பட்டதுடன்  விசேட உரையும்  நிகழ்த்தப்பட்டது அதனைத்தொடர்ந்து அங்கு நிர்மாணிக்கப்பட்ட்ட நினைவுத்தூபியில் மலரஞ்சலி தூவி நினைவுகூரப்பட்டது

அதனைத்தொடர்ந்து  படைப்பிரிவின் அங்கத்தவர்களின்  பங்கேற்பில் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது இந்த நிகழ்வில் ஹிங்குரகோட விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் குலதுங்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

மேலும் இதனைமுன்னிட்டு குமாரகம சுதர்மாராம விகாரையில் சமூக சேவை திட்டமும்  வீர மரணமடைந்த போர்வீரர்களுக்ககான போதி பூஜைவழிபாடுகளும்  எற்பாடு செய்யப்பட்டது

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை