இலங்கை விமானப்படையின் 2022 ம் ஆண்டின் சிறந்த வேளான்மை போட்டிகள்இலங்கை விமானப்படையின் 2022 ம் ஆண்டின் சிறந்த வேளான்மை போட்டிகள்
9:14am on Tuesday 24th January 2023
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன் பத்திரனவின்ஆலோசனைப்படி , "வாக சங்க்ராமயே" திட்டத்தின் கீழ் தேசிய உணவு உற்பத்தி செயல்முறைக்கு பங்களிக்கும் வகையில் விமானப்படை தளங்களில்  விவசாய வேலைத்திட்டம்

நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்போது சிறந்த விவசாயத் திட்டத்திற்காக ஒவ்வொரு படைத்தளமும்  எடுத்து வரும் முயற்சியைப் பாராட்டப்பட்டது

எயார் கொமடோர் ரஜீவ் கொடிப்பிலி தலைமையில், கட்டளை விவசாய அதிகாரி குரூப் கப்டன் எரந்திக குணவர்தன தலைமையிலான நடுவர்கள்  குழுவின் மேற்பார்வையின் கீழ் முழு ஆய்வும் நடத்தப்பட்டது."சிறந்த வேளாண்மைத் திட்டம்", சாகுபடிக்கான கரிமப் பொருட்களைப் பயன்படுத்துதல், வளத் திறன் மற்றும் செயல்திறன் உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களின் கீழ் மதிப்பீடு செய்யப்பட்டது.
இறுதியாக  வெற்றிபெற்ற படைத்தளத்திற்கு  பரிசாக ரொக்கப்பணம்  இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களின் வழிகாட்டலின்கீழ் இடம்பெற்றது

இதன்போது விமானப்படை தளம் பாலாவி முதலிடத்திற்கு ரூ. 500,000, இரண்டாவது இடத்தை சீனக்குடா விமானப்படை  அகாடமி ரூ.300,000 மற்றும் மூன்றாம் இடத்தை முல்லைத்தீவு விமானப்படை தளம் ரூ.200,000 ரொக்கப் பரிசுகளைப் பெற்றன இலங்கை விமானப்படை தளம் கட்டுநாயக்கா, வவுனியா விமானப்படை தளம், தியத்தலாவை விமானப்படை போர் பயிற்சி பள்ளி, வன்னி விமானப்படை ரெஜிமென்ட் பயிற்சி பள்ளி, கட்டுகுருந்த விமானப்படை தளம், மட்டக்களப்பு விமானப்படை தளம் மற்றும் விமானப்படை தளம் ஏ கேம்ப் ஆகியவற்றிற்கு ஆறுதல் பரிசுகள் தலா ரூ.50,000. கொடுக்கப்பட்டது.ஆறுதல் பரிசுகள் தலைமைதளபதி எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டது.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2023 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை