இலங்கை விமானப்படை விளையாட்டு வீராங்கனைகளுக்கான ஊக்கமூட்டல் நிகழ்வுகள்
2:48pm on Thursday 9th March 2023
இலங்கை விமானப்படையின் விளையாட்டுத் துறைகளில் அங்கம் வகிக்கும் இலங்கை விமானப்படையின் ஆடவர் மற்றும் மகளிர் விளையாட்டு வீரவீராங்கனைகளுக்காக  இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களின் வழிகாட்டலின் கீழ்

கடந்த 2023 பிப்ரவரி 6 ஆம் திகதி  கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள அஸ்ட்ரா மண்டபத்தில் ஃபோனிக்ஸ்பெயர் நிறுவனத்தின் தொழில்முறை ஊக்குவிப்பாளரும் CEO வுமான திரு பாதியா அத்தநாயக்க அவர்களினால் நடத்தப்பட்டது

இந்த நிகழ்வானது விமானப்படை டெக்வாண்டோ  விளையாட்டு பிரிவின்  செயலாளர் விங் கமாண்டர் வகிஸ்டா அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டதோடு இந்த நிகழ்வில் சுமார் 94 வீர வீராங்கனைகள் பங்கு பற்றினர்
 12வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டிற்கு தயாராகும் வகையில்  வீர வீராங்கனைகளை ஊக்குவிப்பதற்காக இந்த விசேட செயல் திட்டம்

ஏற்பாடு செய்யப்பட்டது
இறுதியாக விமானப்படை ஜூடோ விளையாட்டு பிரிவின் முகாமையாளர்  சாஜன் கர்ணாரத்ன அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது
இந்த நிகழ்வில் இலங்கை விமானப்படையின் விளையாட்டு சபையின் செயலாளர் குரூப் கேப்டன் எறந்த கீகனகே மற்றும் விமானப்படையின் விளையாட்டு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் படை வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் 

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை