
பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி இலங்கை விமானப்படை தளபதியினை சந்தித்தார்
பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஷா அவர்கள் கடந்த 2023 ஜனவரி 10ம் திகதி இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களை இலங்கை விமானப்படை தலைமையகத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்
பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி அவர்கள் கொழும்பு விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சுரேஷ் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் விமானப்படை வர்ண அணிவகுப்பு படைப்பிரிவின் இராணுவ மரியாதையுடன் வரவேற்கப்பட்டார் .
இதன்போது இருதரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடலின்பின்பு இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறப்பட்டது மேலும் விமானப்படை பணிப்பாளர்களையும் இதன்போது அவர் சந்தித்தார்.