04 வது உலக இராணுவ கடற்கரை கரப்பந்துபோட்டிகள் நீர்கொழும்பு கடற்கரையில் விமர்சையாக ஆரம்பிக்கப்பட்டது
11:09am on Friday 17th March 2023
2023 ம் ஆண்டுக்கான 04 வது உலக இராணுவ  கடற்கரை  கரப்பந்து  முதல் சுற்றுப்போட்டிகள் கடந்த 2023 பெப்ரவரி  13 ம்  திகதி  நீர்கொழும்பு கடற்கரையில்  விமர்சையாக ஆரம்பிக்கப்பட்டது

முதல் சுற்று ஆட்டங்களில் பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, ஓமன், சவுதி அரேபியா, கொலம்பியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் விளையாட்டு வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு போட்டியிலும் பங்கேற்கும் நாடுகளின் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சர்வதேச தொழில்நுட்ப நடுவர் குழு உள்ளது. இந்த நபர்களுக்கு பீச் வாலிபால் விதிகள் மற்றும் நடைமுறைகள் பற்றிய விரிவான அறிவு இதன்மூலம் அவர்களுக்கு கிடைக்கப்பெறும்.
லீக் முறைப்படி, சாம்பியன்ஷிப் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. காலிறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகள் நாக் அவுட் முறையின்படி விளையாடப்படும், மேலும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் தொடரில் வெற்றி பெற்ற அணிகள்  2023 பெப்ரவரி  17ம் திகதி   இறுதிப் போட்டியில் விளையாடும்

Click here to Summary of results
1st DayClick here to Summary of results
2nd Day


3rd Day
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2023 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை